முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்

திங்கட்கிழமை, 19 ஜனவரி 2015      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன் - இந்த ஆண்டின் முதல் கிராண்ட்சிலாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் இன்று தொடங்குகிறது.

நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச், இரண்டாம் நிலை வீரர் ரோஜர் பெடரர், 3ம் நிலை வீரர் ரபெல் நடால், நடப்பு சாம்பியனும், 4ம் நிலை வீரருமான வாவ்ரிங்கா ஆகியோரிடையே சாம்பியன் பட்டம் பெற கடும் போட்டி நிலவுகிறது. 

27 வயதான ஜோகோவிச் 7 கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய ஓப்பன் பட்டத்தை 3 முறை கைப்பற்றினார். 33 வயதான ரோஜர் பெடரர் 17 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று சாதனை புரிந்து இருக்கிறார்.

ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 4 முறை வென்றுள்ளார். கடந்த 4 முறையும் அவர் அரை இறுதியில் தோற்றார். 29 வயதான நடால் 14 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை 9 முறை கைப்பற்றி சாதனை புரிந்துள்ளார். ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை ஒரு முறை மட்டுமே கைப்பற்றினார். 

கடந்த முறை இறுதி போட்டியில் தோற்றார். 25 வயதான வாவ்ரிங்கா ஒரே ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெற்றுள்ளார். முதன்மை சுற்றுக்கு தகுதி பெற்ற இந்திய வீரர் யூகிபாம்ப்ரிக்கு தொடக்கமே சவாலானது. அவர் 6ம் நிலை வீரரான ஆண்டிமுர்ரேவை முதல் சுற்றில் சந்தித்துள்ளார். பெண்கள் பிரிவில் செரினா வில்லியம்ஸ், மரியா ஷரபோவா, ஷிமோனா, குவிட்டோவா, இவானோவிக், பவுச்செர்ட் ஆகியோரிடையே போட்டி நிலவுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து