முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்சார் போர்டு உறுப்பினர்கள் ராஜினாமா: மத்திய அரசுக்கு கண்டனம்

திங்கட்கிழமை, 19 ஜனவரி 2015      சினிமா
Image Unavailable

புது டெல்லி - மத்திய திரைப்பட தணிக்கை குழுவுடனான பிரச்சினையை ஐக்கிய முற்போக்கு கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி இடையேயான விவகாரமாக மத்திய அரசு மாற்றியது துரதிஷ்டவசமானது என காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

டெல்லியில் இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் திவாரி செய்தியாளர்களிடம் கூறுகையில், 

மத்திய திரைப்பட தணிக்கை குழுவுடனான அரசின் பிரச்சினையை ஐக்கிய முற்போக்கு கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி விவகாரமாக நிதியமைச்சர் அருண்ஜெட்லி மாற்றியது துரதிஷ்டவசமானது. 

திரைப்பட தணிக்கை குழு நியமனங்களை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசியலாக்கியது என அருண்ஜெட்லி கருதினால் மத்தியில் பாஜக கூட்டணி அரசு பதவியேற்றவுடன் அந்த குழுவை கலைத்திருக்கலாம். ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீது ஜெட்லி தெரிவித்த குற்றச்சாட்டில் எதுவும் உண்மையில்லை. அரசின் செயல்படாத்தன்மையை மறைக்கவே இது போல் குற்றச்சாட்டை ஜெட்லி தெரிவித்திருக்கிறார் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து