முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சினிமா தணிக்கை குழுவை அரசியலாக்கியது காங்கிரஸ் தான்

திங்கட்கிழமை, 19 ஜனவரி 2015      சினிமா
Image Unavailable

சென்னை - சினிமா தணிக்கைக் குழுவை அரசியலாக்கியது காங்கிரஸ் ஆட்சி தான் என சென்னையில் பேட்டியளித்த மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு, நேற்று தெரிவித்தார்.

இன்று சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் தணிக்கைக் குழு உறுபினர்களின் ராஜினாமா பற்றிய  பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் ”நேற்று வரை அதிகாரத்தில் இருந்தவர்கள் அவர்கள்(தணிக்கைக் குழு உறுப்பினர்கள்) தான். எனவே தணிக்கை துறையில் ஏதேனும் தவறு என்றால், அதற்கு அவர்கள் தங்களைத் தான் குற்றம் சாட்டிக்கொள்ள வேண்டும்” என்றார்.

மேலும், சினிமா தணிக்கைக் குழுவை அரசியலாக்கியது காங்கிரஸின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிதானென்றும், புதிதாக பொறுப்பேற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை தணிக்கைக் குழுவை சேர்ந்தவர்கள் குற்றஞ்சாட்ட கூடாதென்றும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து