முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எரிபொருள் பிரச்சனை விரைவில் தீர்க்கப்படும்: ஷெரீப்

திங்கட்கிழமை, 19 ஜனவரி 2015      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் - இஸ்லாமாபாத்: நாட்டில் ஏற்பட்டுள்ள பெட்ரோல் பிரச்சனை விரைவில் தீர்க்கப்பட்டு மக்களுக்கு பெட்ரோல் நிவாரணம் வழங்கப்படும் என்றார் பிரதமர் நவாஸ் ஷெரீப்.

பெட்ரோலின் தேவைக்கும் அது வழங்கப்படுவதற்கும் இடையிலுள்ள வேறுபாட்டை களையும்விதமாக தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
 
கடந்த ஒரு வாரமாகவே பெட்ரோல் தேவை என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. ஷெரீப் கடந்த ஞாயிறு அன்று நாட்டில் உருவாகியுள்ள பெட்ரோல் பிரச்சனை குறித்து விசாரணைக்கு ஏற்பாடு செய்திருந்தார். சனிக்கிழமை சவுதி அரேபியாவிலிருந்து திரும்பியதும் பெட்ரோலியத்துறை செயலாளர் அபீட் சயீத், அவரது துணைச் செயலாளர் நயீம் மாலிக், மாநில பெட்ரோலியத் துறைத் தலைமை அதிகாரி அம்ஜத் ஜான்ஜூவா ஆகியோரை சந்தித்து இதுகுறித்து ஆய்வு செய்தார்.
 
இந்தப் பெட்ரோல் பிரச்சனையால் 2000க்கும் அதிகமான மெகாவாட் மின்சார உற்பத்தி குறைந்துள்ளது. மேலும் 7,000 மெகாவாட் மின்சக்தியின் தேவையை உருவாக்கியுள்ளது. மேலும் நிறைய மின்உற்பத்தி நிலையங்கள் விரைவில் தங்கள் வேலையை நிறுத்த உள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து