முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் ஒரே நாளில் 600 தீவிரவாதிகள் கைது

திங்கட்கிழமை, 19 ஜனவரி 2015      உலகம்
Image Unavailable

பெஷாவர் - பாகிஸ்தானில் கைபர் பக்துன்கவா பிராநத்ியத்தின் போலீசாரும் ராணுவத்தினரும் அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர். அங்கு சட்டவிரோதமாக குடியேறிய 125 ஆப்கான் அகதிகல் உட்பட 600 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

பாகிஸ்தானில் அப்கான் எல்லையை ஒட்டி கைபர் பக்துன்கவா பிராந்தியம் அமைந்துள்ளது. இங்கு தலிபான்கள் உட்பட பல்வேறு தீவிரவாத இயக்கங்கள் முகாம்கலை அமைத்து பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். பெஷாவர் நகரில் கடந்த மாதம் 16-ம் தேதியன்று ராணுவ பள்ளியின் மீது தலிபான்கள் தீவிர துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினார்கள். இத்தாக்குதலில் 134 குழந்தைகள் உட்பட 150 பேர் பலியானார்கள். இச்சம்பவத்துக்கு அனைத்து நாடுகளும் கண்டனம் தெரிவித்தன.

இதைத் தொடர்ந்து தலிபான்கள் உள்பட பல்வேறு தீவிரவாத இயக்கங்களின் செயல்பாடுகளை ஒழிக்கும் பணியில் பாகிஸ்தான் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அத்துடன் பாகிஸ்தான் சிறையில் பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடைய தலிபான் தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கைபர் பக்துன் கவர் பிராந்தியத்தில் இருக்கும் 1,392 பள்ளிகளில் பிராந்திய போலீசாரும் ராணுவத்தினரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அங்கு சட்டவிரோதமாக குடியேறிய 125 ஆப்கான் அகதிகள் உட்பட 600-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை ராணுவம் கைது செய்தது.

அவர்களிடம் இருந்து 113 தானியங்கி துப்பாக்கிகள் மற்றும் பல்வேறு ரக 3,034 துப்பாக்கி குண்டுகளையும் போலீசார் கைப்பற்றினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து