முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

7 புதிய கவர்னர்கள் விரைவில் நியமனம்: ராஜ்நாத்

திங்கட்கிழமை, 19 ஜனவரி 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - பல்வேறு மாநிலங்களில் கவர்னர் பதவி காலியாக உள்ள நிலையில் புதிதாக ஏழு கவர்னர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளோம் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
 
மத்தியில் பாஜக அரசு பதவி யேற்ற பிறகு காங்கிரஸ் ஆட்சியில் நியமனம் செய்யப்பட்ட கவர்னர்கள் பதவி விலகுமாறு நிர்பந் தம் அளிக்கப்பட்டது. அதன்படி ஷீலா தீட்சித் (கேரளா), எம்.கே. நாராயணன் (மேற்கு வங்கம்), பி.வி. வாஞ்சூ (கோவா), சேகர் தத் (சத்தீஸ்கர்) உள்ளிட்டோர் அடுத்தடுத்து கவர்னர் பதவியை ராஜினாமா செய்தனர். மிசோரம் கவர்னர் கமலா பெனிவால், புதுச்சேரி துணைநிலை கவர்னர் வீரேந்திர கட்டாரியா ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
 
தற்போது பிஹார், அசாம், மணிப்பூர், மேகாலயா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் கவர்னர் பதவி காலியாக உள்ளது.
மேற்கு வங்க ஆளுநர் கேசரி நாத் திரிபாதி பிஹார், மேகாலயா மாநிலங்களின் கவர்னர் பொறுப்பை கூடுதலாகக் கவனித்து வருகிறார். அதேபோல நாகாலாந்து கவர்னர் பி.பி.ஆச்சார்யா அசாம், திரிபுரா மாநிலங்களின் கூடுதல் ஆளுநராகவும், உத்தராகண்ட் கவர்னர் கே.கே.பால் மணிப்பூர் கவர்னராகவும் பணியாற்றி வருகின்றனர்.
 
பஞ்சாப் கவர்னர் சிவராஜ் பாட்டீல் வரும் 21-ம் தேதியும் இமாச்சலப் பிரதேச கவர்னர் ஊர்மிளா சிங் வரும் 24-ம் தேதியும் ஓய்வு பெற உள்ளனர். அடுத்த சில மாதங்களில் தமிழக கவர்னர் கே.ரோசய்யா, ஒடிஸா கவர்னர் எஸ்.சி.ஜமீர் ஆகியோர் ஓய்வு பெறுகின்றனர்.
 
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியபோது, தற்போது கவர்னர் பதவி காலியாக உள்ள மாநிலங்களில் இன்னும் 15 முதல் 20 நாட்களுக்குள் புதிய கவர்னர் நியமிக்கப்படுவார்கள். மொத்தம் 7 கவர்னர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து