முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாளை முதல் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்

திங்கட்கிழமை, 19 ஜனவரி 2015      வர்த்தகம்
Image Unavailable

புது டெல்லி - கோரிக்கைகள் மீது மத்திய அரசு தொடர்ந்து கெடுபிடி காட்டிவருவதால் நாளை 21-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை 4 நாட்களுக்கு வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக பொதுத்துறை வங்கி ஊழியர்கள் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. இதனால் 6 நாட்கள் தொடர்ந்து வங்கிகள் மூடப்படும் அபாயகரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஊதிய உயர்வு, வாரத்துக்கு 5 நாட்கள் மட்டும் வேலை, நிர்ணயிக்கப்பட்ட வேலை நேரம், மருத்துவ உதவி திட்டத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு பல்வேறு போராட்டங்களை நடத்தியது. இந்திய வங்கிகள் சங்கத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையும் நடத்தியது.
பேச்சுவார்த்தையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 7-ம் தேதி நடத்தப்படவிருந்த ஒருநாள் வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டது.
 
இந்நிலையில், ஊதிய உயர்வு கோரிக்கைகள் மீது மத்திய அரசு தொடர்ந்து கெடுபிடி காட்டிவருவதால் வரும் ஜனவரி 21 முதல் 24-ம் தேதி வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக வங்கி ஊழியர்கள் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
எனவே, ஜனவரி 21 முதல் 24 மற்றும் 25-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை, 26-ம் தேதி குடியரசு தினம் என்பதால் 6 நாட்கள் தொடர்ந்து வங்கிகள் மூடப்படும் அபாயகரமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து