முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்கவாழ் இந்தியருக்கு மார்ட்டின் லூதர் கிங் விருது

செவ்வாய்க்கிழமை, 20 ஜனவரி 2015      வர்த்தகம்
Image Unavailable

வாஷிங்டன் - அமெரிக்கவாழ் இந்திய தொழிலதிபரும் கொடையாளியுமான பிராங்க் இஸ்லாமுக்கு கவுரவமிக்க மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் விருது வழங்கப்பட்டுள்ளது.
 
லூதர் கிங் கொள்கை வழியில் பிராங்க் இஸ்லாம் ஆற்றிவரும் பணிகளை அங்கீகரிக்கும் வகையில் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. லூதர் கிங் நினைவு அறக்கட்டளையின் தலைவர் ஹேரி ஜான்சன் இவ்விருதை வழங்கினார்.
மகாத்மா காந்தி மார்ட்டின் லூதர் கிங் இடையே அழிக்க முடியாத தொடர்பு உள்ளது என்று குறிப்பிட்ட பிராங்க் இஸ்லாம் இவ்விருது பெருவதில் பெருமை அடைவதாக கூறினார். பிராங்க் இஸ்லாம், உத்தரப்பிரதேச மாநிலம் ஆசம்கர் நகரில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து