முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆக்ஸ்போர்டு டிக்சனரியில் 240 இந்தியச் சொற்கள் சேர்ப்பு

செவ்வாய்க்கிழமை, 20 ஜனவரி 2015      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா - ஆக்ஸ்போர்டு அட்வான்ஸ்டு லேனர்ஸ் அகராதியின் 9-வது பதிப்பில் சுமார் 240 இந்திய ஆங்கிலச் சொற்கள் இடம்பெற்றுள்ளன.
 
புதிதாக வெளியிடப்பட்டுள்ள இந்தப் பதிப்பில், இந்திய சமையலறைகளில் புழக்கத்தில் உள்ள சொற்களான 'கீமா' (சுவையான கொத்துக்கறி), பாப்பட் (அப்பளம்), 'கறி லீஃப்' (கறிவேப்பிலை) உள்ளிட்டச் சொற்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
 
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகத்தின் அகராதி தயாரிப்புப் பிரிவு தலைமை அதிகாரி பாட்ரிக் ஒயிட் நூலை வெளியிட்டு கூறும்போது, "உலகத்தின் பல மொழிகளிலிருந்தும் பெறப்பட்ட தாக்கங்களை உள்ளடக்கிய ஓர் உலக மொழி ஆங்கிலம். அதேபோல இந்திய உணவும் உலகப் புகழ்பெற்றது. உலகப் பயன்பாட்டில் இடம்பெற்றுவிட்ட சொற்களைப் பிரதிபலிக்கும்விதமாக அச்சொற்களை உள்ளடக்கி இந்த அகராதியை நாங்கள் தயாரித்துள்ளோம். இம்முறை மிகப் பெரிய எண்ணிக்கையில் புதிய இந்தியச் சொற்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
 
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, இந்த 9-வது பதிப்பில் மட்டும கூடுதலாக 900 சொற்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றில் 20 சதவீத சொற்கள் இணையதள உலகிலிருந்து பெறப்பட்டுள்ளவை" என்றார் .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து