முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒபாமா வருகை: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

செவ்வாய்க்கிழமை, 20 ஜனவரி 2015      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் - அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்தியப் பயணத்தின்போது, எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதல் நடைபெறாமல் இருப்பதை பாகிஸ்தான் உறுதிப்படுத்த வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. பாகிஸ்தான் மண்ணில் இருந்து வந்தவர்களால் ஏதேனும் தாக்கல் நடத்தப்பட்டது தெரியவந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் பாகிஸ்தானை அமெரிக்கா எச்சரித்துள்ளது.
 
டெல்லியில் வரும் 26-ம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக ஒபாமா பங்கேற்க உள்ளார். டெல்லி ராஜபாதையில் திறந்தவெளி மேடையில் 2 மணி நேரத்துக்கும் மேலாக அமர்ந்து அவர் குடியரசு தின விழா அணி வகுப்பை பார்வையிடுகிறார். இதனால் அவரது பாதுகாப்பில் அமெரிக்க மற்றும் இந்திய பாதுகாப்பு அமைப்புகள் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றன.
 
இந்நிலையில் ஒபாமாவின் பயணத்தின்போது, இந்தியாவில் எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களோ அல்லது அதற்கான முயற்சிகளோ நடைபெறாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று பாகிஸ்தானிடம் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
 
இந்தியாவில் ஏதேனும் தாக்குதல் நடந்து, இதில் பாகிஸ்தா னுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அந்நாட் டுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒபாமா பயணத்தையொட்டி ஆப்கானிஸ் தானில் உள்ள அமெரிக்கப் படைகளும் தங்கள் பிராந்தியத் தில் தீவிரவாதிகளின் செயல்பாடு களை தீவிரவாக கண்காணித்து வருகின்றனர்.

பாகிஸ்தானில் உள்ள அமெரிக்கத் தூதரகமும் விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. குடியரசு தின விழா நடை பெறும் டெல்லி ராஜபாதையை சுற்றிலும் டெல்லி போலீஸார் 80 ஆயிரம் பேருடன் துணை ராணுப்படையைச் சேர்ந்த 10 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து