முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் மீண்டும் குடியமர்த்த பண்டிட்டுகள் கோரிக்கை

செவ்வாய்க்கிழமை, 20 ஜனவரி 2015      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர் - காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் தங்களை மீண்டும் குடியமர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காஷ்மீர் பண்டிட்கள் வலியுறுத்தி உள்ளனர்.
 
கடந்த 1990-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலம் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து காஷ்மீர் பண்டிட்கள் வெளியேறினர். தாங்கள் வெளியேறி 25 ஆண்டுகள் முடிந்ததைக் குறிக்கும் வகையில் பண்டிட்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நடைபெற்ற நிகழ்ச்சியில் காஷ்மீர் பண்டிட்களின் கூட்டமைப்பான பனுன் காஷ்மீர் தலைவர் அஷ்வனி குமார் க்ருங்கூ பேசியதாவது:
 
காஷ்மீர் பள்ளத்தாக்கில் அடிப் படைவாதிகளும் தீவிரவாதிகளும் பண்டிட்கள் மீது கொடூரமாக இனவெறி தாக்குதல் நடத்தினர். பண்டிட் இனத்தை அழித்தொழிப் பதற்காக அவர்களை படுகொலை செய்தனர். இதனால் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறிய ஆயிரக்கணக்கான பண்டிட்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், மத்தியில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு எங்களுக்கு உதவும் என்று எதிர்பார்க்கிறோம்.

எங்களை மீண்டும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் மறு குடியமர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதேநேரம், அரசியல் மற்றும் சட்ட ரீதியாக மார்கதர்ஷன் தீர் மானத்தை செயல்படுத்த உறுதி அளித்தால் மட்டுமே நாங்கள் அப்பகுதிக்கு மீண்டும் திரும்பு வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து