முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுனந்தா கொலை வழக்கு: சசிதரூரிடம் மீண்டும் விசாரணை

செவ்வாய்க்கிழமை, 20 ஜனவரி 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - சுனந்தா புஷ்கர் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, தேவைப்பட்டால் சசி தரூரிடம் மீண்டும் விசாரணை மேற்கொள்ளப்படும் என டெல்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ்.பாஸி தெரிவித்துள்ளார்.
 
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "இந்த வழக்கு தொடர்பாக இதுவரை பலரிடம் விசாரணை மேற்கொண்டோம். இன்னும் சிலரிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டியுள்ளது. நேற்று முன்தினம் இரவு சசி தரூரிடம் மூன்றரை மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தேவைப்பட்டால் அவரிடம் 2-ம் சுற்று விசாரணை மேற்கொள்ளப்படும்" என்றார்.
 
சசி தரூரின் 3-வது மனைவி சுனந்தா புஷ்கர், கடந்த ஆண்டு டெல்லியில் உள்ள நட்சத்திர விடுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் விஷம் கொடுத்து கொல்லப்பட் டுள்ளார் என பிரேதப் பரிசோதனையில் தெரியவந்தது. பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் மெஹர் தராருக்கும், சசி தரூருக்கும் ‘நட்பு’ இருப்பதாக, கொல்லப்படுவதற்கு ஒருநாள் முன்பாக சுனந்தா குற்றம்சாட்டியிருந்தார். இக்கொலை வழக்கு தொடர்பாக விசாரிப்பதற்காக, சசி தரூருக்கு டெல்லி போலீஸார் கடந்த வாரம் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.
 
இந்நிலையில், கேரளத்தில் இருந்து டெல்லி வந்த சசி தரூர், தனது இல்லத்தில் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்பு தெற்கு டெல்லியில் உள்ள வசந்த விஹார் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அவர் ஆஜரானார். வசந்த விஹார் காவல் நிலையத்தில் துணை ஆணையர் பிரேம்நாத், கூடுதல் துணை ஆணையர் குஷ்வாஷ், முதுநிலை இன்ஸ்பெக்டர் ராஜேந்தர் சிங், விசாரணை அதிகாரி விகேபிஎஸ் யாதவ் உள்ளிட்டோர் அடங்கிய குழு அவரிடம் விசாரணை நடத்தியது. இந்நிலையில், தேவைப்பட்டால் சசி தரூரிடம் இரண்டாம் கட்ட விசாரணை மேற்கொள்ளப்படும் என டெல்லி போலீஸ் கமிஷனர் கூறியிருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து