முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகாரில் காதல் தகராறில் 3 பேர் உயிருடன் எரிப்பு

செவ்வாய்க்கிழமை, 20 ஜனவரி 2015      இந்தியா
Image Unavailable

முஸாபர்பூர் - பீகார்  மாநிலம் முஸாபர்பூர் மாவட்டத்தில் காதல் பிரச்சினையால் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து, ஏற்பட்ட மோதலில் 3 பேர் உயிருடன் எரித்துக் கொல்லப் பட்டனர். இதுதொடர்பாக 14 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
 
பாட்னா அருகே உள்ள அஜிஸ்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணை பக்கத்து கிராமத்தை சேர்ந்த வேற்று மத இளைஞர் ஒருவர் காதலித்துள்ளார்.  கடந்த 9-ம் தேதி முதல் அவரைக் காணவில்லை. இந்நிலையில், கிராமத்துக்கு அருகே அவரது சடலம் கண்டெடுக்கப் பட்டது. காதல் பிரச்சினையால் அவர் கடத்திக் கொலை செய்யப்பட்டதாக தகவல் பரவியது.
 
இதையடுத்து, சுமார் 3,000 பேர் அந்த இளம்பெண்ணின் கிராமத்துக்கு சென்று அங்கிருந்த வீடுகள், வாகனங்களை தீயிட்டு கொளுத்தினர். அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இதனால் அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
 
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் பெரும்பாலான வீடுகள், வாகனங்கள் தீயில் கருகின. 3 பேர் தீயில் சிக்கி உயிரிழந்தனர். பெரும்பாலானவர்கள் வீடுகளை விட்டு வெளியேறி இருந்தனர்.
 
இதையடுத்து ஏராளமான போலீஸாருடன் மாவட்ட காவல் துறையின் மூத்த அதிகாரிகள் அனைவரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். அங்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக  அடையாளம் தெரியாத 5 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்து உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து