முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதன்முறையாக இலங்கை செல்கிறார் மோடி

செவ்வாய்க்கிழமை, 20 ஜனவரி 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்திக்கு பிறகு இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதன்முறையாக இலங்கை செல்ல முடிவு செய்திருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

இலங்கையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் சர்வாதிகார போக்குடன் நடந்து கொண்ட ராஜபக்சேவின் ஆட்சி முடிவுக்கு வந்தது. எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்ட மைத்ரிபால சிறிசேன புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அதிபர் மைத்ரிபால சிறிசேன தனது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வர விருப்பம் தெரிவித்துள்ளார்.

அதற்கு முன்னதாக இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீரா 3 நாட்கள் பயணமாக இந்தியா வந்தடைந்தார். அவர் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பிரதமர் மோடி உள்ளிட்டோரை சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான உறவு, மீனவர் பிரச்னை உள்ளிட்டவை குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார். கடந்த 1987ம் ஆண்டு இந்திய பிரதமராக இருந்த ராஜிவ் காந்தி இலங்கை சென்றார். அதன் பிறகு இந்திய பிரதமர்கள் யாரும் இலங்கை செல்லவில்லை.

தற்போது இலங்கை மற்றும் இந்தியாவில் ஏற்பட்டுள்ள புதிய ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து முதன்முறையாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா வந்திருந்த இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீரா நிருபர்களிடம் பேசுகையில், புதிய அரசு இந்தியாவுடன் ஆழமான நட்பை மேற்கொள்ள விரும்புகிறது என்றார்.

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன இந்தியா வந்து சென்றதும் பிப்ரவரியில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கை செல்கிறார். இதனைத் தொடர்ந்து இந்திய பிரதமர் மோடியும் முதன்முறையாக இலங்கை செல்ல வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.மேலும் சமரவீரா கூறுகையில், தேர்தலின் இறுதி நேரத்தில் ராஜபக்சே அவசர நிலையை கொண்டு வந்து ஆட்சியை கைப்பற்ற சதி செய்ததாக புகார்கள் எழுந்துள்ளன. அதுகுறித்து விசாரணை நடத்தப்படும். அதே போல் கடந்த 2009ம் ஆண்டு ராஜபக்சே ஆட்சியின் போது விடுதலைபுலிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து