முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திர முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமீன்

செவ்வாய்க்கிழமை, 20 ஜனவரி 2015      வர்த்தகம்
Image Unavailable

புது டெல்லி - சுரங்க முறைகேடு வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கு 4 ஆண்டுகளுக்கு பின் சுப்ரீம் கோர்ட் ஜாமீன் வழங்கியுள்ளது.
 
கர்நாடகத்தில் ரெட்டி சகோதரர்கள் என்று அழைக்கப்பட்ட கருணாகர ரெட்டி, ஜனார்த்தன ரெட்டி ஆகியோர் ஆந்திரா, கர்நாடக எல்லையில் சுரங்க நிறுவனங்கள் நடத்தி வந்தனர். முதலில் காங்கிரசில் இருந்த இவர்கள் பின்னர் பாரதீய ஜனதாவில் இணைந்தனர். கர்நாடகத்தில் எடியூரப்பா மந்திரிசபையில் இருவரும் மந்திரிகளாக இருந்தனர்.

அப்போது சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக ஜனார்த்தன ரெட்டி மீது புகார் கூறப்பட்டது. இதை தொடர்ந்து இருவரும் மந்திரி சபையில் இருந்து நீக்கப்பட்டனர். பின்னர் எடியூரப்பா தனிக்கட்சி தொடங்கியதும் அதில் இணைந்தனர். கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆந்திராவில் நடந்த சுரங்க முறைகேடு புகார் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி ஜனார்த்தன ரெட்டியை கைது செய்தது. அவர் ஐதராபாத் சிறையில் அடைக்கப்பட்டார். ஜனார்த்தன ரெட்டி ஜாமீன் கேட்டு ஐதராபாத் விசேஷ கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அது நிராகரிக்கப்பட்டது. அவருக்கு ஜாமீன் வழங்க நீதிபதியிடம் பேரம் பேசியதாக பரபரப்பு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது. இது தொடர்பாகவும் ஜனார்த்தன ரெட்டி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது போன்ற காரணங்களால் ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. சிறையிலேயே இருந்தார். இந்த நிலையில் ஜனார்த்தன ரெட்டி சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் ஜனார்த்தன ரெட்டிக்கு நேற்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. 2011ல் கைது செய்யப்பட்ட அவருக்கு 4 ஆண்டுகளுக்கு பின்பு ஜாமீன் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

வாசகர் கருத்து

1 கருத்துகள்

  1. Anonymous January 21, 09:00

    There needs to be a time frame for for filing charge sheet and grant of bail. In this case it has taken more than 3 years.General argument is tampering of witnesses to keep one behind the bars
    Now in case if he is acquitted for any reason then who will carry the blame

    Reply to this comment
    View all comments

    வாசகர் கருத்து