முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீரங்கத்தில் உ.பி., அசாம் அதிகாரிகள் பார்வையாளர்களாக நியமனம்

புதன்கிழமை, 21 ஜனவரி 2015      அரசியல்
Image Unavailable

சென்னை  -   ஸ்ரீரங்கம் தொகுதியில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள அசாம் மற்றும் உத்தரபிரதேசத்தை ,சேர்ந்த உயர் அதிகாரிகள்  தேர்தல்  பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி  சந்தீப் சக்சேனா  சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத் தேர்தலில் செலவுகளை கண்காணிக்க இந்திய வருவாய்ப் பணி அதிகாரி ஸ்ரீதரதோரா பார்வையாளராக நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார். . இப்போது உத்தர பிரதேசத்தை சேர்ந்த , பல்கார் சிங் பொதுப்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று முதல் தனது பணியை தொடங்குவார்.

மேலும்  சட்டம்-ஒழுங்கை  கண்காணிக்க  அசாம் ஐ.பி.எஸ். அதிகாரி வினோத்குமார், மற்றொரு பார்வையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஒரிரு நாட்களில் அவர்  பணியில் ஈடுபடுவார் .. தேர்தல் தொடர்பாக   1950 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவிக்கலாம்.

ஸ்ரீரங்கம் தொகுதியில் தேர்தல் நடத்தை நெறிமுறைகளை அமலாக்கத்தையும், அவற்றை கண்காணிக்கவும் மண்டல அளவில் 31 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இரண்டு சிறப்புக் குழுக்களும், ஒரு பறக்கும் படையும், விடியோ காமிரா கொண்ட மற்றொரு குழுவும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பொதுச் சுவர்களில் தேர்தல் பிரசார விளம்பரங்கள் செய்வது தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை மீறி அரசு சுவர்களில் விளம்பரங்களைச் செய்தது தொடர்பாக 10 வழக்குகளும், அனுமதியின்றி தனியார் சுவர்களில் விளம்பரம் செய்தததால் 260 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு மாவட்ட நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் எந்தெந்தத் திட்டங்களை தொகுதிக்குள்ளும், எந்தெந்தத் திட்டங்களை அந்தத் தொகுதி அமைந்துள்ள திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களுக்குள் செயல்படுத்தக் கூடாது என்பது பற்றி ஏற்கனவே மாவட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, ஸ்ரீரங்கம் தொகுதிக்குள் வருவாய்த் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் அம்மா திட்டம், இலவச வேட்டி, சேலைகள், குறைதீர் முகாம்கள் ஆகியவற்றை நடத்தக் கூடாது. இதற்கான உத்தரவை இந்திய தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது. ஆனால் , குடியரசு தின விழா, டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு, கொசு ஒழிப்பு திட்டம் ஆகியவற்றை நடத்த எந்தத் தடையில்லை.
 இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து