முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜஸ்தானில் 60% பிரதிநிதிகள் தகுதி இழக்கும் நிலை

புதன்கிழமை, 21 ஜனவரி 2015      இந்தியா
Image Unavailable

ஜெய்ப்பூர் - ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட கல்வித் தகுதியை நிர்ணயித்து அம்மாநில அரசு பிறப்பித்த உத்தரவால் 60 சதவீத உள்ளாட்சி பிரதிநிதிகள் தகுதி இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட குறைந்தபட்ச கல்வித் தகுதியை நிர்ணயித்து அம்மாநில அரசு கடந்த டிசம்பர் மாதம் அவசர சட்டம் பிறப்பித்தது. இந்த அவசர சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் வழக்குத் தொடர்ந்தன. ஆனால் சுப்ரீம் கோர்ட் ராஜஸ்தான் அரசின் முடிவில் தலையிட மறுத்துவிட்டது.

இந்த புதிய அவசர சட்டத்தால் தற்போது பதவியில் இருக்கும் 60 சதவீத  உள்ளாட்சி பிரதிநிதிகள் தகுதி இழக்கும் நிலை உருவாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து