முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வட மாநிலங்களில் பனி மூட்டம்: 94 ரயில்கள் ரத்து

புதன்கிழமை, 21 ஜனவரி 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - வட மாநிலங்களில் தொடர்ந்து கடும் குளிர் நிலவி வருகிறது. பனிமூட்டத்தால் 94 ரயில்கள் ரத்து  செய்யப்பட்டுள்ளன. 36 ரயில்கள் தாமதமாக வந்து சேர்ந்துள்ளன.டெல்லி, பஞ்சாப், உத்திரபிரதேசம், அரியானா  ஆகிய மாநிலங்களில் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது.

காலை மற்றும் மாலை நேரங்களில் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலையுள்ளது. பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எதிரே வரும் வாகனங்கள் சரிவர தெரியாததால் விபத்துக்களும் நடக்கின்றன.

வட மாநிலங்களில் நிலவி வரும் கடும் குளிருக்கு இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் மிகவும் குறைந்தளவாக 2.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தது. இதேபோல் டெல்லியிலும் கடும் குளிர் நிலவி வருகிறது. பனிமூட்டம் காரணமாக ரயில் சேவை  பாதிக்கப்பட்டுள்ளது.
 
வட மாநிலங்களில்  பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் 94 ரயில்கள் நேற்று ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், 36 ரயில்கள் தாமதமாக வந்து சேர்ந்தன என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர்,  இமாச்சல பிரதேசம் ஆகிய இடங்களிலும் கடும் குளிர் நிலவி வருகிறது. இந்த நிலை அடுத்த மாதம் முதல் வாரம்  வரை  நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து