முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.8000 கோடி சுருட்டிய 20 இலங்கை மாஜி அமைச்சர்கள்

புதன்கிழமை, 21 ஜனவரி 2015      உலகம்
Image Unavailable

கொழும்பு - இலங்கையில் முன்னாள் அதிபர் ராஜபக்சே குடும்பத்தினர் சுருட்டிய ரூ.13 ஆயிரம் கோடியைத் தொடர்ந்து அவரது ஆட்சியின் போது மேலும் ரூ.8 ஆயிரம் கோடியை சுருட்டிய 20 அமைச்சர்கள் குறித்து  பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சே படுதோல்வியை தழுவினார். எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்ட மைத்ரிபால சிறீசேனா வெற்றி பெற்று அதிபரானார். தேர்தலின் இறுதி  நேரத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தி ராணுவத்தின் துணையுடன் ஆட்சியை தக்க வைக்க ராஜபக்சே  முயன்றதாக புதிய அரசு குற்றம் சாட்டியுள்ளது. இதுதவிர ராஜபக்சேவின் ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள்,  முறைகேடுகள், வன்கொலைகள், மனித  உரிமை மீறல்கள், போர் குற்றங்கள், அத்துமீறல்கள் போன்றவற்றை  மைத்ரிபால சிறீசேனா அரசு தோண்டி துருவத் தொடங்கி விட்டது.
 
புதிய அதிபர் மைத்ரிபால சிறீசேனாவும், புதிய பிரதமர்  ரணில் விக்ரமசிங்கேவும் ராஜபக்சேவுக்கு எதிரான நடவடிக்கைகைள  துரிதப்படுத்தி வருகின்றனர். அவர்களது மகன்கள் முறைகேடாக வெளிநாட்டு கார் வாங்கிய விவகாரம், வெள்ளை வேன் மூலம் ராணுவம் மற்றும் போலீசாரை பயன்படுத்தி அவரது குடும்பத்தினர் செய்த  சட்ட விரோத கொலைகள் என்று அடுக்கடுக்காக புகார்கள் பாய்ந்து வருகின்றன.மேலும் அதிபர் மாளிகையில் ராஜபக்சே பதுக்கிய 1500 கோடியை அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும் கருவூலத்தில் இருந்து ரூ.13 ஆயிரம்  கோடியை ராஜபக்சே குடும்பத்தினர் சுருட்டியதும் அம்பலமானது.

இதனையடுத்து நிதி முறைகேடு குறித்து விசாரணை நடத்த மைத்ரிபால சிறீசேனா அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில் ராஜபக்சேவைத் தொடர்ந்து அவரது ஆட்சியில் 20 அமைச்சர்கள் கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டி உள்ளது தெரியவந்துள்ளது.இதுகுறித்து அமைச்சக செயலாளர் அஜித் ஜய சுந்தர  கூறுகையில்,
 
ராஜபக்சே ஆட்சியில் பதவியில் இருந்த 20 அமைச்சர்கள் ரூ.8000 கோடி மோசடி செய்திருப்பதற்கான  ஆதாரங்களும், சாட்சியங்களும் கிடைத்துள்ளன.  இதனையடுத்து அவர்கள் மீது லஞ்சம், ஊழல், முறைகேடு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் விசாரணை நடத்த ஆணைகுழுவுக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது என்றார். இதில்  மாத்தறை, அம்பாந்தோட்டை, இரத்தினபுரி, புத்தளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த அமைச்சர்கள் சிக்கியுள்ளனர். இவர்களுக்கு எதிராக வழக்கு தொடரவும் அரசு முடிவு செய்துள்ளது என்று அஜித் ஜெய சுந்தர  தெரிவித்துள்ளார். தற்போது இந்த விவகாரம் இலங்கையில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து