முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சந்திரபாபு நாயுடுவின் சர்ச்சை பேச்சுக்கு கண்டனம்

புதன்கிழமை, 21 ஜனவரி 2015      இந்தியா
Image Unavailable

நகரி - என்.டி. ராமாராவ் நினைவு நாளையொட்டி கடந்த 18ம் தேதி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு 18 கி.மீ தூரம் பாதயாத்திரை சென்று கிராம மக்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,
 
ஆந்திராவில் வயதானவர்களே அதிகம் உள்ளனர். இளைஞர்கள் குறைவாகத்தான் உள்ளனர். எனவே அனைவரும் அதிக குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள். அப்போதுதான் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதே போல் ஜப்பானிலும் வயதானவர்களே அதிகம் உள்ளார்கள் என்று பேசினார். அதிக குழந்தைகள் பெற்று கொள்ள வேண்டும் என்ற சந்திரபாபு நாயுடுவின் பேச்சு ஆந்திராவில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 
இந்திய கம்யூனிஸ்டு முன்னாள் தலைவர் நாராயணா கூறுகையில், பாரதீய ஜனதா இந்துக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்துக்கள் அனைவரும் அதிக குழந்தை பெற்று கொள்ளுங்கள் என்று முன்பு கூறியது. பாரதீய ஜனதாவை திருப்திப்படுத்துவதற்காக சந்திரபாபு நாயுடு இப்படி பேசியுள்ளார் என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர் ராகவலு, மது கூறுகையில்,
 
சந்திரபாபு நாயுடுவுக்கு என்ன பேசுகிறோம் என்பதே தெரியவில்லை. அவருக்கு மனநிலை சரியில்லை. இருக்கும் குழந்தைகளுக்கே இங்கு சத்துணவு கொடுக்க வசதியில்லை. படிக்க வைக்க வசதியில்லை என்று பிரதமர் மோடியே சொல்லியுள்ளார். ஆனால் சந்திரபாபு நாயுடு ஏன் அதிகம் குழந்தை பெற்று கொள்ளுமாறு கூறுகிறார் என தெரியவில்லை என்றார். இதே போல் ஒய்.எஸ்.ஆர்.  மற்றும் லோக்சக்தி கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும் சந்திரபாபு நாயுடுவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து