முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸி ஓபன்: 3வது சுற்றில் ஜோகோவிச் - செரீனா

வியாழக்கிழமை, 22 ஜனவரி 2015      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன் - கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. உலகின் நம்பர் ஒன் வீராங்கனையும், ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 5 முறை வென்றவருமான செரீனா வில்லியம்ஸ்(அமெரிக்கா) 2வது சுற்றில் ரஷ்ய வீராங்கனை ஜூவனோராவை எதிர்கொண்டார்.

இதில் செரீனா 7-5,6-0 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று 3வது சுற்றுக்கு தகுதி பெற்றார். 3வது சுற்றில் அவர் எலீனாவை(உக்ரைன்) சந்திக்கிறார். இதே போல் 6ம் நிலை வீராங்கனை ரட்வன்ஸ்கா(போலந்து) 6-0, 6-1 என்ற கணக்கில் சுவீடன் வீராங்கனை ஜோகன்னாவை வீழ்த்தினார்.

மற்ற ஆட்டங்களில் சிபுல்கோவா(சுலோவாக்கியா), வீனஸ் வில்லியம்ஸ்(அமெரிக்கா), கார்பின்(ஸ்பெயின்) ஆகியோர் வென்று 3வது சுற்றுக்கு நுழைந்தனர். ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 4 முறை வென்றவரும், உலகின் நம்பர் ஒன் வீரருமான ஜோகோவிச்(செர்பியா) 2வது சுற்றில் ரஷ்ய வீரர் ஆந்த்ரே குஷ்னெட் ஸ்டோவை எதிர்கொண்டார். இதில் ஜோகோவிச் 6-0,6-1, 6-4 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று 3வது சுற்றுக்கு நுழைந்தார்.

அவர் இந்த சுற்றில் பெர்னாண்டோ வெர்டெஸ்கோ(ஸ்பெயின்) அல்லது சொய்டாவை(ஜப்பான்) சந்திக்கிறார். நடப்பு சாம்பியனும், 4ம் நிலை வீரருமான வாவ்ரிங்கா(சுவிட்சர்லாந்து) 7-6,7-6,6-3 என்ற கணக்கில் ருமேனிய வீரர் மரியசை வீழ்த்தினார். மற்ற ஆட்டங்களில் 5ம் நிலை வீரர் நிஷிகோரி , ஜான் இஸ்னெர், பெலிசியோனா, லோபஸ் ஆகியோர் வென்று 3வது சுற்றில் நுழைந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து