முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரண்பேடிக்கு சாந்திபூஷண் வாழ்த்து: அதிருப்தியில் கெஜ்ரிவால்

வியாழக்கிழமை, 22 ஜனவரி 2015      அரசியல்
Image Unavailable

புது டெல்லி - டெல்லி பா. ஜனதா முதல்வர் வேட்பாளர் கிரண்பேடிக்கு சாந்திபூஷண் வாழ்த்து தெரிவித்ததால் கெஜ்ரிவால் அதிருப்தி அடைந்துள்ளார்.
 
டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜனதா முதல்வர் வேட்பாளராக கிரண்பேடி அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்றுமுன்தினம் கிருஷ்ணா நகர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னாள் போலீஸ் அதிகாரியான கிரண்பேடி முன்பு ஹசாரே, அரவிந்த் கெஜ்ரிவால், வக்கீல் சாந்திபூஷண் ஆகியோர் இணைந்து நடத்திய ஊழல் எதிர்ப்பு போராட்டங்களில் பங்கேற்றார். ஊழல் எதிர்ப்பு இயக்க முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தார்.
கெஜ்ரிவால் புதிய கட்சி தொடங்கிய போது கிரண்பேடி எதிர்ப்பு தெரிவித்தார்.

அவரது கட்சியில் சேராமல் நடுநிலை வகித்தார். ஆனால் சாந்திபூஷண் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு தெரிவித்தார். ஆம் ஆத்மி கட்சியில் உறுப்பினராகவும் உள்ளார். இந்த நிலையில் பா.ஜனதா முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கிரண்பேடிக்கு சாந்திபூஷண் திடீர் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
கிரண்பேடி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை வரவேற்கிறேன். நல்ல தலைவர் அவர். அவரால் சிறப்பான நிர்வாகத்தை கொடுக்க முடியும். கிரண்பேடி முன்பு ஹசாரேவின் ஊழர் எதிர்ப்பு இயக்கத்தில் இருந்தவர். அவரை ஹசாரேயும் வாழ்த்தி இருக்கிறார். இவ்வாறு சாந்திபூஷண் கூறினார்.
 
தனது கட்சியை சேர்ந்த சாந்திபூஷண், கிரண்பேடியை வாழ்த்தி இருப்பது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. சாந்திபூஷண் கூறியது பற்றி ஆம் ஆத்மி தலைவர் அசுதோஷ் கூறுகையில், அது அவரது சொந்த கருத்து. அந்த கருத்தில் கட்சிக்கு உடன்பாடு இல்லை. எங்கள் கட்சியில் உட்கட்சி ஜனநாயகம் உள்ளது. ஒவ்வொருவருக்கும் கருத்துக்கள் சொல்ல சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது என்றார். இதனிடையே தனக்கு வாழ்த்து சொன்ன சாந்திபூஷணுக்கு கிரண்பேடி நன்றி தெரிவி்த்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து