முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீரங்கம் தொகுதி திமுக வேட்பாளர் மனுத்தாக்கல்

வியாழக்கிழமை, 22 ஜனவரி 2015      அரசியல்
Image Unavailable

திருச்சி - ஸ்ரீரங்கம் தொகுதி திமுக வேட்பாளர் ஆனந்த் நேற்று மனுத்தாக்கல் செய்தார்.
 
ஸ்ரீரங்கம் தொகுதிக்கு அடுத்த மாதம் 13ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறதுத. அதிமுக சார்பில் வளர்மதியும், திமுக சார்பில் ஆனந்தும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். வேட்பு மனுத்தாக்கல் கடந்த 19ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் அதிமுக வேட்பாளர் வளர்மதி மனு தாக்கல் செய்தார்.
 
திமுக வேட்பாளர் என். ஆனந்த் நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவர் திருச்சி சோழன் நகரில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான மனோகரனிடம் மனு தாக்கல் செய்தார். அப்போது வேட்பாளருடன் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் கே.என். நேரு, திருச்சி சிவா எம்.பி, புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பெரியண்ணன் அரசு, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன் மகன் ஹபிபுர் ரகுமான் ஆகிய 4 பேர் சென்றனர்.
 
மனு தாக்கல் செய்ததும் வேட்பாளர் ஆனந்த் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் பகுதியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கினார். அங்கிருந்து ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் பகுதிகளில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து