முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒபாமாவின் பாதுகாப்புக்காக ஆக்ராவில் அமெரிக்க வீரர்கள்

வியாழக்கிழமை, 22 ஜனவரி 2015      இந்தியா
Image Unavailable

ஆக்ரா - உலகப் புகழ் பெற்ற தாஜ்மகாலை பார்ப்பதற்காக அமெரிக்க அதிபர் ஒபாமா தனது குடும்பத்தினருடன் வரும் 27ம் தேதி அங்கு வரவிருப்பதால் அவர்களது பாதுகாப்புக்காக அமெரிக்க பாதுகாப்பு படையினர் 100 பேர் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மேலும் அவர்களுடன் இந்திய பாதுகாப்பு படையினர் 4 ஆயிரம் பேரும் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
 
ஒபாமாவின் வருகையையொட்டி ஆக்ராவில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த இறுதிக்கட்ட ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பிறகு ஆக்ரா நகர காவல் கண்காணிப்பாளர் ராகேஷ் மோடக் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
 
பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றிய விவரங்களை விரிவாக கூற முடியாது. எனினும் ஏராளமான ராணுவ வீரர்களும், போலீசாரும் குவிக்கப்படவுள்ளனர். உள்ளூர் போலீஸ், துணை ராணுப படையினர் என 4 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். அவர்களுடன் அமெரிக்க பாதுகாப்பு படை வீரர்களும் பணியில் ஈடுபடவுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
 
இதனிடையே 30 பேர் கொண்ட அமெரிக்க பாதுகாப்பு குழு தாஜ்மகாலில் முகாமிட்டு உள்ளூர் போலீசார் உதவியுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளை தினமும் ஒருங்கிணைத்து வருகின்றனர். குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வரும் 25ம் தேதி இந்தியா வரும் ஒபாமா, அன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுகிறார். இதையடுத்து அவர் 27ம் தேதி தாஜ்மகாலுக்கு செல்கிறார்.
 
இதற்காக ஆக்ராவில் உள்ள விமான நிலையத்தில் இருந்து தாஜ்மகால் வரை 11 கி.மீ. தொலைவுக்கு கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வான்வழி பாதுகாப்புக்காக ஹெலிகாப்டர்களை ஈடுபடுத்த உத்தரபிரதேச மாநில அரசு முடிவு செய்துள்ளது. மேலும் அண்டை மாவட்டங்களை சேர்ந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள், காவல் ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர்கள் என நூற்றுக்கணக்கானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து