முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி துணை மேயராக ஜெ.சீனிவாசன் போட்டியின்றி தேர்வு

வியாழக்கிழமை, 22 ஜனவரி 2015      அரசியல்
Image Unavailable

திருச்சி - திருச்சி மாநகராட்சி துணைமேயராக இருந்தவர் மரியம் ஆசிக். இவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் துணைமேயர் பதவியிடம் காலியாக இருந்தது. இந்தநிலையில் திருச்சி மாநகராட்சி துணை மேயர் தேர்தலில் போட்டியிட தற்போதைய அரியமங்கலம் கோட்டத்தலைவர் சீனிவாசன் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா உத்தவிட்டார்.
 
இதைதொடர்ந்து நேற்று துணை மேயருக்கான மறைமுக தேர்தல் திருச்சி மாநகராட்சி கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் விஜயலெட்சுமி தேர்தல் அதிகாரியாக இருந்தார். அவரிடம் துணை மேயர் பதவிக்கு போட்டியிடும் சீனிவாசன் விண்ணப்ப மனுவை தாக்கல் செய்தார். அவரது மனுவை கோட்டத்தலைவர்கள்  மனோகரன், ஞானசேகரன், ஆகியோர்கள் முன்மொழிந்தனர்.

வேறு யாரும் துணைமேயர் பதவிக்கு போட்டியிடாததாலும், திருச்சி மாநகராட்சியில் பெரும¢பான்மையான அதிமுக கவுன்சிலர்கள் இருப்பதாலும், துணைமேயராக ஜெ.சீனிவாசன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு அரசு கொறடா மனோகரன் எம்.எல்.ஏ. திருச்சி எம்.பி.குமார், மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. பரஞ்சோதி. மேயர் ஜெயா ஆகியோர் சீனிவாசனுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்க்ளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டனர். அதை தொடர்ந்து அதிமுக நிர்வாகிகளும், பாராட்டி பொன்னாடை அணிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து