முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடியுடன் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு

வியாழக்கிழமை, 22 ஜனவரி 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - இந்தியாவுக்கு அரசு முறை பயணமாக வந்துள்ள ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சர் செர்ஜி ஷோய்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.
 
இந்த சந்திப்பின் போது கடந்த ஆண்டு ரஷ்ய அதிபர் புடின் இந்தியா வந்த போது இரு நாடுகளுக்கும் இடையே மேற்கொண்ட பல்வேறு ஒப்பந்தங்களை மோடி நினைவுகூர்ந்தார். இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியி்ட்டுள்ள செய்தி குறிப்பில்,
 
பாதுகாப்பு, தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு ஆணையத்தின் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள ரஷ்ய அமைச்சர் செர்ஜி புது டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த ஆண்டு பிற்பகுதியில் ரஷ்யாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க தான் ஆர்வத்துடன் காத்திருப்பதாக ரஷ்ய அமைச்சரிடம் மோடி தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையேயுள்ள நல்லுறவு, புதிய ஒப்பந்தங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர் என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து