முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி தேர்தல்: 1404 பேர் வேட்பு மனு தாக்கல்

வியாழக்கிழமை, 22 ஜனவரி 2015      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி - டெல்லி சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 7ம்  தேதி தேர்தல் நடைபெறுகிறது. மொத்தமுள்ள 70  தொகுதிகளுக்கு நடைபெறும் இந்த தேர்தலில்  வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்க பாஜ, ஆம் ஆத்மி  உள்ளிட்ட  கட்சிகள் தீவிரம்  காட்டி வருகின்றன.

கடந்த தேர்தலில் பாஜ 31 இடங்களை பிடித்தபோதும் பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி  அமைக்க முடியவில்லை. அதற்கு அடுத்த இடத்தில் இருந்த ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ்  தரவுடன் ஆட்சி அமைத்தது. அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வரானார். ஜன் லோக்பால் மசோதாவை  நிறைவேற்ற முடியாததால் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, 49 நாட்களில் ஆம் ஆத்மி ஆட்சி முடிவுக்கு வந்தது. டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி  அமலில் இருந்தது. இந்நிலையில், அடுத்த மாதம் 7ம்  தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் களம் சூடு பிடித்தது. ஆம் ஆத்மி,  காங்கிரஸ் ஆகியவை வேட்பாளர்கள் பட்டியலை முன்கூட்டியே அறிவித்து, தேர்தல் பணியில் ஈடுபட்டு வந்தன.

இந்தமுறை ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற நோக்கில் பாஜ தீவிரமாக தேர்தல்  பணியாற்றி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த 10ம் தேதி டெல்லியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். இது பாஜ தொண்டர்களிடம்  உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பாஜ முதல்வர் வேட்பாளராக கிரண் பேடி அறிவிக்கப்பட்டார். 49 நாட்களில்  ஆட்சியை இழந்த ஆம் ஆத்மி இந்தமுறை ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது. கடந்த தேர்தலில் படுதோல்வியை சந்தித்த காங்கிரஸ் கட்சி இந்த முறை கவுரவமான இடங்களை பெற வேண்டும் என கடுமையாக உழைத்து வருகிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணை தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பிரசாரம் மேற்கொள்ள  உள்ளனர்.

இந்நிலையில், கடந்த 14ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் கடந்த 21ம் தேதியுடன் முடிவடைந்தது. கடைசி நாளான கடந்த 21ம்தேதி பாஜ முதல்வர் வேட்பாளர் கிரண்பேடி, ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் காங்கிரஸ்  கட்சியின் மூத்த தலைவர் அஜய் மாக்கன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

கிருஷ்ணா நகர் தொகுதியில் கிரண் பேடியும், புதுடெல்லி தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவாலும்,  சதார் பஜாரில் அஜய் மாக்கன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். வேட்பு மனுதாக்கலின் போது, கிரண்பேடி தன்னுடைய சொத்து மதிப்பு ரூ.11 கோடி என்றும், அரவிந்த் கெஜ்ரிவால் தனது சொத்து மதிப்பு ரூ.2.09 கோடி என்றும் தெரிவித்திருந்தனர். பாஜ, ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின்  முக்கிய தலைவர்கள் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜ, ஆம் ஆத்மி, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி  நிலவுவதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. கட்சி தலைவர்கள், தொண்டர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில் இந்த மனுக்கள்  இன்று பரிசீலினைக்கு எடுத்துக்கொள்ளப்படும். மொத்தம் 1,404 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். புதுடெல்லி தொகுதியில் அதிகபட்சமாக 23 பேரும், தெற்கு டெல்லியில் உள்ள அம்பேத்கர் நகர் தொகுதியில் 6 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

நாளை வேட்பு மனுக்களை வாபஸ் பெற  கடைசி நாள். தேர்தல் அடுத்த மாதம் 7ம் தேதி நடக்கிறது. 10ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.கடந்த 5ம் தேதி வரையிலான கணக்கெடுப்பின்படி, டெல்லியில் 1 கோடியே 30 லட்சத்து 85 ஆயிரத்து 251 வாக்காளர்கள் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து