முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுனந்தாவின் லேப்டாப் தடய அறிவியல் ஆய்வுக்கு ஒப்படைப்பு

வியாழக்கிழமை, 22 ஜனவரி 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - டெல்லி ஓட்டலில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் லேப்டாப் மற்றும் செல்போன்கள் குஜராத் மாநிலத்தில் உள்ள தடய அறிவியல் சோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக  போலீசார் தெரிவித்தனர்.
 
காங்கிரஸ் எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான சசிதரூரின் காதல் மனைவி சுனந்தா புஷ்கர்  கடந்த  ஆண்டு ஜனவரி மாதம் டெல்லியில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்து  கொண்டதாக ஆரம்பத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
 
இந்நிலையில் கடந்த மாதம் எய்ம்ஸ் டாக்டர்கள் குழு கொடுத்த அறிக்கையில் அவர் விஷம்  கொடுத்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக டெல்லி போலீசார் மாற்றினர். சுனந்தா மரணத்தில் மறைந்து  கிடக்கும் உண்மைகளை வெளிக்கொண்டுவர சிறப்பு புலனாய்வு குழு ஒன்றையும் டெல்லி போலீஸ் அமைத்தது.

இந்தக்குழு சசிதரூரிடம் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தியது. விசாரணைக்கு சசிதரூர் முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக போலீஸ் கமிஷனர் தெரிவித்தார். கேரளாவை சேர்ந்த சில நிறுவனங்கள் கொச்சி ஐபிஎல் அணியை வாங்க மத்திய  அமைச்சரின் மனைவி என்ற முறையில்  சுனந்தா உதவியதாகவும் அதற்காக அவர் ரூ. 70 கோடி கமிஷன்  வாங்கியதாகவும் புகார் எழுந்தது.
 
இந்த புகார் காரணமாக சசிதரூர் அப்போது அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். இந்த  விவகாரத்தில் தான் பலிகடா ஆக்கப்பட்டதாக இறப்பதற்கு முன்பு சுனந்தா தனது நண்பர்களிடம் புலம்பியுள்ளார். இது டெல்லி போலீசாரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது  குறித்து சசிதரூரிடம்  விசாரணை நடத்தப்படும் என சிறப்பு புலனாய்வு குழு அறிவித்துள்ளது.

இதற்கிடையில்  சுனந்தா புஷ்கருக்கு சொந்தமான லேப்டாப் மற்றும் 4 செல்போன்கள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள தடய அறிவியல் சோதனை கூடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  அவற்றில் இருந்து அழிக்கப்பட்ட தகவல்களை திரும்ப எடுக்கும்படி தடய அறிவியல் கூட இயக்குநர் ஜே.எம்.வியாசிடம் டெல்லி போலீஸ் கோரிக்கை வைத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து