முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீரங்கம்: இந்திய கிறிஸ்தவர் முன்னணி அ.இ.அ.தி.மு.க வுக்கு ஆதரவு

வியாழக்கிழமை, 22 ஜனவரி 2015      அரசியல்
Image Unavailable

மதுரை -  ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் இந்திய கிறிஸ்தவர் முன்னணி அஇஅதிமுகவுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளது.

இந்திய கிறிஸ்தவர் முன்னணியின் ஆட்சி மன்ற குழு கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நடைபெறவிருக்கின்ற திருச்சி ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவை தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 கடந்த சட்டமன்ற,நாடாளுமன்ற,உள்ளாட்சி மன்ற தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களில் வழங்கிய ஆதரவை தொடர்ந்து நடைபெறவிருக்கின்ற திருச்சி ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலிலும் அதிமுக வேட்பாளர் வளர்மதிக்கு ஆதரவை தெரிவித்து அவரது வெற்றிக்கு உழைக்க இந்திய கிறிஸ்தவர் முன்னணி உறுதி பூண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னணியின் தலைவர் டாக்டர் எம்.எல்.சுந்தரம் தலைமையில் பொதுசெயலர் டாக்டர் எம்.லோகநாதன்,பொருளாளர் கே.முத்துச்சாமி ஆகியோர் அடங்கிய தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டு இந்த குழுவினர் கிறிஸ்தவர்கள் மற்றும் ஏணைய சிறுபான்மையினர் மத்தியில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குகளை சேகரிப்பார்கள் என்று முன்னணியின் தலைவர் டாக்டர் எம்.எல்.சுந்தரம் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து