முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீரங்கம்: அமைச்சர்கள் வீதி வீதியாக சென்று பிரச்சாரம்

வெள்ளிக்கிழமை, 23 ஜனவரி 2015      அரசியல்
Image Unavailable

திருச்சி - ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் அதிமுகவின் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதிமுக சார்பில் வேட்பாளர் வளர்மதியை மக்கள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்ய தமிழக அமைச்சர்கள் ஸ்ரீரங்கம் தொகுதிக்குள் தங்கி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதுதவிர நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் கிராமத்தில் முகாமிட்டு வேட்பாளர் வளர்மதிக்காக தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கி உள்ளனர்.

ஸ்ரீரங்கம் நகரில் மட்டும் 6 வார்டுகள் உள்ளது. இங்கு சுமார் 1 லட்சம் ஓட்டுகள் உள்ளது. இந்த 6 வார்டுகளிலும், முன்னனி அமைச்சர்கள், முகாமிட்டு தேர்தல் பணியாற்றி வருகிறார்கள். ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை ஸ்ரீரங்கம் நகரம், அந்தநல்லூர் மணிகண்டம் ஒன்றியங்கள், மணப்பாறை ஒன்றியத்தில் 8 ஊராட்சிகளும் இதில் அடக்கம். இந்த தொகுதியில் 2 லட்சத்து 70 ஆயிரத்து 129 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்த பகுதிகள் முழுவதும் அதிமுகவினர் கிராம கிராமமாக அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் முகாமி¢ட்டு தேர்தல் பணியை முடுக்கிவிட்டுள்ளனர். மேலும், நிர்வாகிகள் பம்பரம் போல் சுழன்று பணியாற்ற தொடங்கிவிட்டனர்.
இந்ததொகுதியில் திமுக வேட்பாளர் ஆனந்தன், பாரதிய ஜனதா வேட்பாளர் ஆக்ஸ்போர்டு சுப்பிரமணியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் அண்ணாதுரை ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இ¢ந்த கட்சிகளை காட்டிலும் அதிமுக தேர்தல் பிரச்சாரத்தில் முதன்மை வகிக்கிறது. மொத்தம் 322 வாக்குசாவடிகள்உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் பிரித்து அதிமுவினர் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டனர். ஸ்ரீரங்கம் நகரிலும், கிராம பகுதிகளிலும் அதிமுகவினர் மக்களை சந்திக்க தொடங்கிவிட்டனர்.

இந்த தொகுதி ஏற்கனவே மக்கள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்ட தொகுதியாகும். எனவே வாக்காளர்கள் கவருவதில் அதிமுகவினருக்குஎந்த பிரச்சனையும் இருக்காது. இது வி.வி.ஐ.பி. அந்தஸ்து பெற்ற தொகுதியாகும். சுமார் 2 ஆயிரம் கோடிக்கு மேல் நலத்திட்ட பணிகள் நலத்திட்ட உதவிகள் ஆகியவை மக்களுக்கு கிடைத்துள்ளது. இதனால் எதிர்கட்சிகள் அதிமுகவிற்கு போட்டியே கிடையாது என பொதுமக்களின் பரவலான கருத்து.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து