முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இனாம்குளத்தூரில் உசேன் - எம்.பி.க்கள் வாக்கு சேகரிப்பு

வெள்ளிக்கிழமை, 23 ஜனவரி 2015      அரசியல்
Image Unavailable

திருச்சி - திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிப்.13ந் தேதி நடைபெறுகிறது. அதிமுக வேட்பாளராக வளர்மதியை மக்களின் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தேர்தல் பணியை அதிமுகவினர் முந்தி வருகின்றனர். குறிப்பாக அமைச்சர்கள், வாரியத்தலைவர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை கழக நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள் ஆகியோர் தேர்தல் களத்தில் பம்பரமாக சுழன்று பணியாற்றுகின்றனர்.
 
ஸ்ரீரங்கம் பகுதிக்குட்பட்ட இஸ்லாமிய பெருமக்கள் இனாம்குளத்தூர் கிராத்திற்கு தேர்தல் பொறுப்பாளராக தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று இஸ்லாமிய பெருமக்கள் வாழும் பகுதிகளில் சென்று ஓட்டுவேட்டையாடினார். முஸ்லீம் மக்கள் வாரியதலைவர் தமிழ்மகன் உசேனுக்கு வரவேற்பு அளித்தனர்.

இ¢ந்த கிராம பஞ்சாயத்தில் உள்ள வீடுகளில் சென்று தமிழ்மகன் உசேன் தென்காசி எம்.பி. வசந்தி முருகேசன், திருநெல்வேலி எம்.பி. ஏ.ஆர்.பி.பிரபாகர், நாடாளுமன்ற உறுப்பினர் விஜிலா சத்தியானந்த், சங்கரன் கோயில் எம்.எல்.ஏ. முத்துசெல்வி, மாவட்ட சிறுபான்மை செயலாளர் மகபூப்ஜான். தாஜூதீன், கவிஞர் வீரையாஹரின், திருச்சி மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் தீரன் முகமது இக்பால், பங்க் செல்வராஜ், கலீல், திருச்சி தென்னூர் அண்டகுண்டான் அப்பாகுட்டி மற்றும் 150 கழக நிர்வாகிகளுடன் சென்று ஓட்டுவேட்டையாடி வருகிறார். இந்த கிராமத்திலேயே அவர் முகாமிட்டு தேர்தல் பணியாற்றுகிறார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து