முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக்பாலுக்காக தனியாக போராடுவேன்: ஹசாரே

வெள்ளிக்கிழமை, 23 ஜனவரி 2015      இந்தியா
Image Unavailable

மும்பை - இந்தியாவில் ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதற்காக பிரபல சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே போராடி வருகிறார். ஊழலை ஒழிக்க சன் லோக்பால் சட்டத்தை கொண்டு வர அவர் டெல்லியில் உண்ணாவிரதம் இருந்தார். நாடெங்கும் அவர் போராட்டத்துக்கு மக்களிடையே ஆதரவு கிடைத்ததால் மத்திய அரசு லோக்பால் சட்டத்தை கொண்டு வந்தது.

ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்ற அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். இந்த நிலையில் அன்னா ஹசாரேவுக்கு வலது கரமாக திகழ்ந்து வந்த கிரண்பேடி சமீபத்தில் பாஜகவில் சேர்ந்து தேர்தலில் குதித்துள்ளார்.
 
கெஜ்ரிவால், கிரண்பேடி இருவரும் ஹசாரே ஆதரவை பெறும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் இருவருக்கும் ஆதரவு கொடுக்க ஹசாரே மறுத்து விட்டார். இந்த நிலையில் மும்பையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த ஹசாரே கூறியதாவது,
 
ஊழலை ஒழிப்பதற்காக லோக்பால் சட்டத்தை கொண்டு வரக்கோரி என்னுடன் சேர்ந்து போராடியவர்கள் ஏன் அரசியல் கட்சிகளில் போய் சேருகிறார்கள் என்று எனக்கு எதுவும் புரியவில்லை. அரசியல் கலப்பு இல்லாமல் லோக்பால் சட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்பதுதான் எனது நிலைப்பாடாகும்.

ஆனால் என்னுடன் சேர்ந்து போராடியவர்கள் வேறு திட்டங்களுடன் அரசியல்வாதி ஆகி விட்டனர். அவர்களுடன் சேர்ந்து நான் சேவையாற்ற முடியாது. எனவே இனி நான் லோக்பாலுக்காக தனியாகத்தான் போராடப் போகிறேன். நான் அரசியலுக்கு எதிரானவன் என்பதால் கெஜ்ரிவால், கிரண்பேடி இருவரும் தொடர்பு கொள்ளவில்லை. நானும் அவர்களுடன் தொடர்பு கொள்ளப் போவதில்லை. இவ்வாறு ஹசாரே தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

வாசகர் கருத்து

1 கருத்துகள்

  1. Anonymous January 24, 15:39

    உலகம் இன்னும் மா நம்மை நம்புது .... ஹசாரே

    Reply to this comment
    View all comments

    வாசகர் கருத்து