முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டாக்டர் பட்டத்துக்கும் எனக்கும் சம்பந்தமில்லை

வெள்ளிக்கிழமை, 23 ஜனவரி 2015      சினிமா
Image Unavailable

சென்னை - நான் வாங்கியுள்ள டாக்டர் பட்டத்துக்கும் மருத்துவத்துக்கும் சம்பந்தமில்லை என்று நடிகர் கமலஹாசன் கூறினார்.
 
அகில இந்திய 58-வது மகப்பேறு இயல் மற்றும் குழந்தையின்மை குறித்து 5-நாள் கருத்தரங்கம் நத்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்து வருகிறது. கருத்தரங்க கூட்டங்களில் தலைவர் டாக்டர் பிரகாஷ் திரிவேதி, தலைமை வகித்தார். கருத்தரங்க தலைவர் குரியன் ஜோசப், முன்னாள் தலைவர் டாக்டர் சுசித்ரா பண்டிட் முன்னிலை வகித்தனர்.

இதில் இந்தியாவில் உள்ள பல்வேறு மருத்துவமனையின் டாக்டர்கள், மருத்துவ துறையை சார்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமலஹாசன் கலந்து கொண்டார். இதில் கமலஹாசன் பேசியதாவது:

பெண்கள் சம்பந்தமாக நடத்தப்படும் இந்த கருத்தரங்குக்கு நான் டாக்டர் பட்டம் பெற்றுள்ளதால் என்னை அழைத்துள்ளார்கள். ஆனால் நான் வாங்கிய டாக்டர் பட்டத்தால் எனக்கும் மருத்துவத்துக்கும் சம்பந்தமில்லை. பெண்கள் சம்பந்தமான கருத்தரங்கம் என்பதால் என் மகள் ஸ்ருதியை கூட நீங்கள் அழைத்திருக்கலாம். மிகப்பெரிய டாக்டர்கல் இந்த கருத்தரங்குக்கு வந்துள்ளனர். அவர்கள் பேசுவதற்கு வழி விட்டு அமர்கிறேன். இவ்வாறு கமலஹாசன் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து