முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்ம விருதுக்கு நடிகர் ரஜினிகாந்த் தேர்வு

வெள்ளிக்கிழமை, 23 ஜனவரி 2015      சினிமா
Image Unavailable

புதுடெல்லி - தென்னிந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பத்ம விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். குடியரசு தின விழாவில் பிரதமர் மோடி வழங்குகிறார்.

2014-ம் ஆண்டுக்கான பத்ம விருது ரஜினிக்கு வழங்கப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜ அரசு பொறுப்பேற்றதும், முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு சமீபத்தில் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. அதற்கடுத்து 2- வது மிகப்பெரிய விருதான பத்ம விருதுகளை பாஜ மூத்த  தலைவர் எல்.கே.அத்வானி, யோகா குரு பாபா ராம்தேவ், அமிதாப்பச்சன்,  தென்னிந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோருக்கு வழங்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

இந்தியாவில் தொழில், அறிவியல், திரைப்படம், பாடல் உள்ளிட்ட பல்வேறு  துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும்  பத்மஸ்ரீ, பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷண் ஆகிய பத்ம விருதுகளை வழங்கி  வருகிறது.
 
2014-ம் ஆண்டுக்கான பத்ம விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல்  குறித்து மத்திய அரசு வட்டாரத்தில் நேற்று தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி பத்ம விருது பட்டியலில் பாஜ மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, யோகா குரு பாபா ராம்தேவ், பாலிவுட் எவர்கிரீன் ஸ்டார் அமிதாப்பச்சன்,  தென்னிந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இவர்களை தவிர, பஞ்சாபில் சிரோன்மணி அகாலிதள தலைவரும் அம்மாநில முதல்வருமான பிரகாஷ் சிங் பாதல், இந்தி பழம்பெரும் நடிகர் திலீப்குமார், பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் சஞ்சய்  லீலா பன்சாலி, திரைக்கதை ஆசிரியரும் பாடலாசிரியருமான சலீம்கான், படத் தயாரிப்பாளர் பிரசூன் ஜோஷி ஆகியோருக்கும் பத்ம விருதுகள் வழங்கப்பட உள்ளன.

அதேபோல், பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நெவால் மற்றும் வேத  விற்பன்னர் பேராசிரியர் டேவிட் பிராவ்லே ஆகியோரும் பத்ம விருதில் இடம்  பிடித்து உள்ளனர். அநேகமாக இந்த பத்ம விருதுகள் அனைத்தும் புதுடெல்லியில் வரும் 26-ம் தேதி நடைபெறும் குடியரசு தினத்தன்று  வழங்கப்படும் என தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

வாசகர் கருத்து

1 கருத்துகள்

  1. Anonymous January 24, 10:12

    What did he do for the country. These awards are a folly. There are many deserving Indians who are involved in philanthropic activities, and for the upliftment of the down trodden. Of course they do not like the lime light. They are a silent lot. Tamil Actor Vijeyakumar and his son Suriya are doing God's work by providing education to the poor. Mr. Suriya's "Siharam" is a trust that has produced doctors and engineers. There are several of them looking after the poor.Why not select them. Padma award has lost its prestige as all tom Dick and Harry are given without any merit.

    Reply to this comment
    View all comments

    வாசகர் கருத்து