முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்காட்லாந்துக்கு கூடுதல் அதிகாரங்கள்: கேமரூன்

வெள்ளிக்கிழமை, 23 ஜனவரி 2015      உலகம்
Image Unavailable

லண்டன் - இங்கிலாந்தில் இருந்து  ஸ்காட்லாந்தை பிரிக்க பொது வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் ஸ்காட்லாந்து தோல்வி அடைந்தது.  இந்நிலையில் ஸ்காட்லாந்துக்கு கூடுதல் அதிகாரங்களை பகிர்ந்து அளிக்கும் பணிகள் துவங்கியுள்ளனர் என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் அறிவித்துள்ளார்.

இங்கிலாந்து அரசின் ஐக்கிய கூட்டமைப்பில் ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து மற்றும் சவுத் வேல்ஸ் பகுதிகல் இருந்து வருகின்றன. இவை அனைத்தும் தனித்தனி அமைப்புகளாக இருப்பினும், இங்கிலாந்து அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்நிலையில், ஸ்காட்லாந்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் தங்கள் நாட்டுக்கு சுயமாக முடிவெடுப்பதற்கு தேவையான அதிகாரங்களை வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் இங்கிலாந்து அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தினர்.

இங்கிலாந்து கூட்டமைப்பிலிருந்து ஸ்காட்லாந்து பிரிந்து செல்ல பொது வாக்கெடுப்பு நடைபெற்றது. இது தோல்வி அடைந்தது. இருப்பினும் ஸ்காட்லாந்தை பிரிக்க ஏராளமான மக்கள் ஆதரவளித்திருந்தனர். இதைத் தொடர்ந்து, ல்காட்லாந்தில் நடைபெற்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றனர்.

இந்நிலையில் ஸ்காட்லாந்து நாடு சுதந்திரமாக செயல்படுவதற்கு தேவையான அனைத்து அதிகாரங்களும் விரைவில் வழங்கப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் அறிவித்தார். இதற்கான பணிகளை இங்கிலாந்து அரசி மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், ஸ்காட்லாந்து நாட்டில் வருமான வரி, வருவாய் மற்றும் செலவினங்கல் மற்றும் இன்னபிற திட்டங்களில் ஸ்காட்லாந்து நாடாளுமன்றம் முடிவெடுத்து செயல்படுவதர்கு தேவையான அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்படுகின்றன. அதற்கு தேவையான தெளிவான செயல்முறை மற்றும் கால அட்டவணைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் அறிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து