முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண் பிள்ளைகளால் மகிழ்ச்சியில் திளைக்கும் குடும்பங்கள் ஏராளம்

வெள்ளிக்கிழமை, 23 ஜனவரி 2015      இந்தியா
Image Unavailable

பானிபட் - பெண் பிள்ளைகளால் மகிழ்ச்சியில் திளைக்கும் குடும்பங்கள் இந்தியாவில் ஏராளமாக உள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். காப்பாற்றுவோம்; மகளுக்கு கல்வி அறிவூட்டுவோம்' என்ற அரசின் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:

இந்தியாவில் அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பெண் சிசுவை, கருவிலேயே கொல்லும் வழக்கம் இருந்து வருகிறது.  அதிநவீன வளர்ச்சிகளைக் கண்டுள்ள இந்த 21ம் நூற்றாண்டிலும் இந்த அவலம் தொடர்வதுதான் மிகவும் வெட்கக்கேடானது.

18ஆம் நூற்றாண்டிலாவது, பெண் குழந்தைகள் பிறந்து சிறிது காலத்துக்குப் பின்னரே, அவர்கள் கொலை செய்யப்பட்டனர். ஆனால், தற்போது பெண் சிசுவை, தாயின் கருவிலேயே கொன்று வருகிறோம். இதனால், நாம் 18ம் நூற்றாண்டுக்கும் பின்தங்கிய  மனிதர்களாகி விட்டோம். இந்தியாவில் பரவலாக, ஆண் குழந்தைகள் பிறப்புதான் மிகவும் கவுரவமானதாகவும், பெருமையானதாகவும்  கருதப்படுகிறது.

மாறாக, பெண் குழந்தைகள், வேறு வீட்டுக்குச் செல்லும் பொருள்களாகவே பார்க்கப்படுகின்றனர். விண்வெளிக்குச்  சென்ற முதல் பெண்மணி கல்பனா சால்வாவை உலகுக்குத் தந்த அதே அரியானா மண்ணில்தான் அதிக அளவில் பெண் சிசுக்  கொலைகள் அரங்கேறுகின்றன என்பது  மிகவும் வேதனையான  விஷயம். ஆண் குழந்தைகள்தான் பெற்றோரைக் கடைசிக் காலத்தில் காப்பாற்றுவார்கள் என்ற கூற்று உண்மையென்றால், நம் நாட்டில் ஏன்  எண்ணற்ற முதியோர் இல்லங்கள் உள்ளன? ஆண் பிள்ளைகளைப் பெற்ற எத்தனையோ குடும்பங்கள் வேதனையில் தவிக்கின்ற நிலையில், பெண் பிள்ளைகளால் மகிழ்ச்சியில் திளைக்கும் குடும்பங்கள் இந்தியாவில் ஏராளமாக உள்ளன.

இதனை நாம் எப்போது உணரப் போகிறோம்? இன்றைய சூழலில் விஞ்ஞானம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் பெண்கள் சாதித்து வருகின்றனர். பெண் சிசுவைக் கொலை செய்வது என்பது ஓர் மனநோயின் வெளிப்பாடு மட்டுமல்லாமல் அது மிகவும் கீழ்த்தரமான செயலும் ஆகும். இந்தப் பழக்கத்தை நம் நாட்டிலிருந்து முழுமையாக  ஒழிக்க வேண்டும். அந்த நோக்கத்தில்தான்,  "பெண் குழந்தைகளைக் காப்பாற்றுங்கள்' என பிரதமராக இல்லாமல் ஒரு யாசகனாக உங்கள் முன் வேண்டிக்  கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

பெண் குழந்தைகளைக் காப்பதிலும், அவர்களை முன்னேற்றுவதிலும் மருத்துவர்களுக்கு அதிக பொறுப்பு உள்ளது என்பதை மறந்துவிடக்கூடாது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து