முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிமுக நிர்வாகி கந்தசாமி மறைவு: ஜெயலலிதா இரங்கல்

வெள்ளிக்கிழமை, 23 ஜனவரி 2015      அரசியல்
Image Unavailable

சென்னை - அண்ணா திமுக வழக்கறிஞர் பிரிவு துணைச்செயலாளர் கந்தசாமி மறைவுக்கு மக்களின் முதல்வர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அண்ணா திமுக பொதுசெயலாளரும் மக்களின் முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை வருமாறு:

அண்ணா திமுக வழக்கறிஞர் பிரிவு துணைச்செயலாளர் ஏ.கந்தசாமி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன். ஆரம்பகால கழக உடன்பிறப்பு கந்தசாமி, கழகத்தின்பாலும் கழகத்தின் தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அன்பு சகோதரர் கந்தசாமியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்து கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திகிறேன் இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
 
அவர் விடுத்துள்ள மற்றொரு இரங்கல் செய்தியில்,

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் அதிகாரப்பூர்வ நாளேடான டாக்டர் நமது எம்.ஜி.ஆர். நாளிதழின் விற்பனை பிரிவு உதவியாளராக பணியாற்றி வரும் எஸ்.ஜெயக்குமார் சாலைவிபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அகால மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன். அன்பு சகோதரர் ஜெயக்குமார் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்து கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடியில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து