முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவுதி மன்னர் அப்துல் அஜிஸ் காலமானார்

வெள்ளிக்கிழமை, 23 ஜனவரி 2015      உலகம்
Image Unavailable

ரியாத் - சவுதி அரேபிய மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜிஸ் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 90.

கடந்த சில மாதங்களாக நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர் நேற்று காலமானார்.  இதையடுத்து சவுதியின் அடுத்த மன்னராக, இப்போது இளவரசராக இருக்கும் சல்மான் பின் அப்துல் அஜிஸ் (வயது 79 ) முடி சூட்டப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மன்னர் அப்துல்லா மரணத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமா உள்பட உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சவுதியின் புதிய மன்னரான சல்மான் 1935ஆம் ஆண்டு பிறந்தவர். தற்போது சவுதியின் பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்து வருகிறார். கடந்த 2012ஆம் ஆண்டு முதல் மறைந்த மன்னரின் வாரிசாக இந்தியா, சீனா, பாகிஸ்தான் என பல்வேறு வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டவர். ரியாத் மாகாணத்தின் ஆளுநராக 48 ஆண்டுகாலம் பதவி வகித்தார்.

தற்போதைய மன்னர் சல்மானுக்கு ஏற்கெனவே மாரடைப்பு ஏற்பட்டிருப்பதால் அவருக்கு அடுத்த மன்னராக 2013ம் ஆண்டே இளவரசர் முக்ரின் அறிவிக்கப்பட்டார். அவர் இங்கிலாந்தின் ராயல் ஏர் போர்ஸ் கல்லூரியில் படித்தவர். சவுதி விமானப் படையிலும் பணியாற்றினார். பின்னர் மெதீனா மாகாண கவர்னராகவும்  சவுதியின் உளவுத்துறை தலைவராகவும் பணியாற்றினார். மன்னாராகியிருக்கும் சல்மானும் அவருக்குப் பின்னர் மன்னாராகும் முக்ரினும் எதிர்கொண்டுள்ள சவால்கள் மிக கடினமானவை என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து