முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்எஸ்எஸ் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க கோரி மனு

வெள்ளிக்கிழமை, 23 ஜனவரி 2015      உலகம்
Image Unavailable

நியூயார்க் - ஆர்எஸ்எஸ் அமைப்பை உலகளாவிய பயங்கரவாத அமைப்பாகவும், அதன் துணை அமைப்புகளை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளாகவும் அறிவிக்க வேண்டும் என்று கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனை விசாரித்த நீதிமன்றம் 60 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஜான் கெர்ரிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. நியூயார்க்கில் உள்ள தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் சீக்கியர்கள் நீதியமைப்பு என்ற மனித உரிமைகள் அமைப்பு தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டிருப்பதாவது,
 
பாஸிசத்தில் நம்பிக்கை கொண்டுள்ள ஆர்எஸ்எஸ் அமைப்பு, வீடு திரும்புதல் எனும் பெயரில் சிறுபான்மையின முஸ்லீம்களையும், கிறிஸ்தவர்களையும் கட்டாயமாக இந்து மதத்துக்கு மாற்றி வருகிறது. பாபர் மசூதி இடிப்பு, பொற்கோயிலில் சீக்கியர்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை தூண்டியது.

2008ம் ஆண்டு கிறிஸ்தவ பேராலயங்களுக்கு தீ வைத்து கன்னியாஸ்திரிகளை பலாத்காரம் செய்தது, குஜராத் கலவரம் ஆகியவற்றில் தொடர்புடைய ஆர்எஸ்எஸ் அமைப்பு சிறுபான்மையினரை குறி வைத்து தாக்குதல்  நடத்தி வருகிறது. ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்ற அடையாளத்துடன் இந்தியாவை இந்து தேசமாக மாற்றுவதற்கு அந்த அமைப்பு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து