முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உடல் உறுப்பு தானம் செய்வதில் தமிழகம் முதல் இடம்

வெள்ளிக்கிழமை, 23 ஜனவரி 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - உடல் உறுப்பு தானம் செய்வதில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. இதன்மூலம் 2 ஆயிரத்து 178 பேர் காப்பாற்றப்பட்டு உள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக அரசு மக்கள் நலவாழ்வுத்துறை மற்றும் குடும்பநலத்துறை சார்பில் ஒரு செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்தியாவில் 1994-ம் ஆண்டு இயற்றப்பட்ட மனித உடல் உறுப்புகள் மற்றும் அறுவை சிகிச்சை சட்டத்தின்படி, மூளைச்சாவு அடைந்தோரின் உடல் உறுப்புகள் தானம் பெற்று பிற நோயாளிகளுக்கு பொருத்தும் திட்டம் தொடங்கியது. தமிழகத்தில் இந்த பணியை தீவிரமாக செயல்படுத்த அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. சென்னை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி உள்பட 5 அரசு மருத்துவமனைகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட தனியார் ஆஸ்பத்திரிகளிலும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் இதுவரை மூளைச்சாவு அடைந்த 571 பேரின் உடல் உறுப்புகள், உறவினர்களால் தானம் அளிக்கப்பட்டது. அதன்படி இதுவரை 110 இருதயங்கள், 48 நுரையீரல், 527 கல்லீரல்கள், 1,024 சிறுநீரகம், 4 கணையங்கள், சிறுகுடல் என 1,714 உறுப்புகளும், 552 இருதய வால்வுகளும், 854 கண்கள், 13 தோல் என மொத்தம் 3,133 உறுப்புகளும் தானமாக பெறப்பட்டன.

இதில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் உறுப்புகள் வழங்கப்படுகிறது. இதையடுத்து பதிவு மூப்பு அடிப்படையில் தனியார் மருத்துவமனைகளுக்கு கொடுக்கப்படுகிறது. தானமாக பெறப்பட்ட இருதயம்6 மணி நேரத்துக்குள்ளும், கல்லீரல் 12 மணி நேரத்துக்குள்ளும், நுரையீரல் 10 மணி நேரத்திற்குள்ளும், சிறுநீரகம் 24 மணி நேரத்திற்குள்ளும் பொருத்தப்பட வேண்டும்.

மூளைச்சாவு அடைந்தவரின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தால் மட்டுமே உறுப்புகள் தானமாக பெறப்படும். உடல் உறுப்புகள் தானம் செய்வதில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. 2011-ம் ஆண்டு 70 பேர், 2012-ம் ஆண்டு 83 பேர், 2013-ம் ஆண்டு 131 பேர், 2014-ம் ஆண்டு 126 பேரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது.
இந்த திட்டத்தினால் 2011-ம் ஆண்டு 395 பேரும், 2012-ம் ஆண்டு 464, 2013-ம் ஆண்டு 671, 2014-ம் ஆண்டு 645 பேரும் மறுவாழ்வு பெற்றனர்.

கடந்த 3½ ஆண்டுகளில் 2 ஆயிரத்து 178 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மூளைச்சாவு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திட்டத்தை விரிவுபடுத்தி, இதற்காக ஒரு குழுமம் மற்றும் மண்டல உறுப்பு மாற்று சிகிச்சைக்கான மையம் அமைக்கப்படும் என்ற தமிழக அரசு அறிவிப்பின்படி, தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தி அமல்படுத்துவதற்காக, ஒரு அமைப்பைபதிவுபெற்ற சங்கமாக அரசு உருவாக்கியுள்ளது.இவ்வாறு தமிழக அரசு மக்கள் நலவாழ்வுத்துறையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து