முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விளையாட்டு வீராங்கனை சௌமிதா சிகிச்சைக்கு நிதியுதவி

சனிக்கிழமை, 24 ஜனவரி 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - மூளை மற்றும் நரம்பு நோயால் பாதிக்கப்பட்டு   கொல்கத்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளம் விளையாட்டு வீராங்கனை சௌமிதா டேயின் மருத்துவ சிகிச்சைக்காக அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளரும், மக்களின் முதல்வருமான ஜெயலலிதா  எம்ஜிஆர் அறக்கட்டளையில் இருந்து ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.அவர் முழு குணம் அடைய வேண்டும் என்று பிரார்த்திப்பதாக ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

1998-ஆம் ஆண்டு முதல் 10 ஆண்டுகள் மேற்கு வங்கத்தின் சார்பில் பல ஜிம்னேஸ்டிக்ஸ் போட்டிகளில் கலந்து கொண்டவரும், 2010-ஆம் ஆண்டு புதுடெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் நடுவராகப் பணியாற்றியவருமான, 27 வயது இளம் வீராங்கனை செல்வி சௌமிதா டே மூளை மற்றும் நரம்பு தொடர்பான நோயால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கடுமையாகப் பாதிக்கப்பட்டு கொல்கத்தா மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாகவும்; தனது உடல் நிலை பற்றி விளக்கிய சௌமிதா டே, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்ட போது மருத்துவமனையில் உரிய சிகிச்சை தரப்படவில்லை என்றும், தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதன் காரணமாக இப்பொழுது, தான் உடல் இயக்கமற்று உயிருக்கு போராடும் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், சிகிச்சைக்கு பணம் இன்றி தங்கள் ஏழைக் குடும்பம் தவிப்பதாக சௌமிதா டேயின் தாயார் கூறியுள்ளார்.இந்தச் செய்தியைப் பார்த்து நான் பெரிதும் மன வேதனையுற்றேன்.மேற்கு வங்கத்தை சேர்ந்த ஓர் எளிய குடும்பத்தின் பெருமைக்குரிய மகளாகிய சௌமிதா டே தேசிய அளவில் பல விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றவர்.
இன்னும் உலக அளவில் புகழ்  பெறும் வாய்ப்பும், ஆற்றலும் அவருக்கு இருந்தது.

இந்த நிலையில் அவருக்கு ஏற்பட்டிருக்கும் உடல்நலக் குறைவு மீள முடியாததாக உள்ளது என்பதைப் பார்க்கும் போது பெரிதும் வருந்துகிறேன். செல்வி சௌமிதா டே இறையருளால் முழு குணம் அடைய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். கொல்கத்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளம் விளையாட்டு வீராங்கனை சௌமிதா டேயின் மருத்துவ சிகிச்சைக்காக உடனடியாக புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அறக்கட்டளையில் இருந்து 5,00,000/- ரூபாய் (5 லட்சம் ரூபாய்) வழங்க ஆணையிட்டுள்ளேன்.  இவ்வாறு அந்த அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து