முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க அதிபர் ஒபாமா இன்று இந்தியா வருகை

சனிக்கிழமை, 24 ஜனவரி 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - இந்தியாவில் நாளை நடைபெறும் குடியரசு தினவிழாவில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மூன்று நாள் அரசு முறை பயணமாக இன்று டெல்லி வருகிறார். அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. அவரது வருகை முன்னிட்டு டெல்லியில் 7 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒபாமா பயன்படுத்தும் அதிநவீன கார் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் குடியரசு தினவிழாவின் போது வெளிநாட்டை சேர்ந்த தலைவர் ஒருவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுவார். இதுவே மரபாக இருந்து வருகிறது. அந்த அடிப்படையில் நாளை நடைபெறும் குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அழைப்புவிடுக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் ஒருவர் குடியரசு விழாவுக்காக அழைக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை. இந்த அழைப்பை ஏற்று அதிபர் ஒபாமா இன்று மூன்று நாள் பயணமாக டெல்லி வருகிறார்.

டெல்லியில் தங்கிஇருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார். அவரது இந்த பயணத்தின் போது பாதுகாப்பு,அணுசக்தி உள்ளிட்ட துறைகளில் வரலாற்று சிறப்புவாய்ந்த முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. இந்த ஒப்பந்தங்களில் அதிபர் ஒபாமாவும்,பிரதமர் மோடியும் கையெழுத்திடுவார்கள். ஆகவே அவரது பயணம் முக்கியதுவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. முன்னதாக ஒபாமா நேற்று மாலை வாசிங்டனில் உள்ள ஆண்ட்ரூஸ் விமானபடை தளத்திலிருந்து தனது பிரத்யேக விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டார்.

அவருடன் அவரது மனைவி மிச்சேல் மற்றும் அமைச்சர்கள்,தொழிலபர்கள்,அதிகாரிகள் உள்பட சுமார் 80 பேர் அதே விமானத்தில் டெல்லி வருகிறார்கள். இன்று காலை சரியாக 10மணியளவில் அதிபர் ஒபாமா ஜனாதிபதி மாளிகைக்கு வருகிறார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள். அப்போது நடைபெறும் அணிவகுப்பு மரியாதையை அதிபர் ஒபாமா தனக்கே உரித்தான பாணியில் கம்பீரமாக நடந்து ஏற்று கொள்கிறார்.

பிறகு டெல்லி ராஜ்காட்டில் அமைந்துள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்று மலர் அஞ்சலி செலுத்துகிறார். ஒபாமா வருகை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக டெல்லியில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டெல்லி,ஆக்ரா மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆக்ராவில் தாஜ்மஹால் பகுதி முற்றிலும் ஆய்வு செய்யப்பட்டது.

ஆனால் ஒபாமா தனது ஆக்ரா பயணத்தையே ரத்துசெய்யவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடகிழக்கு மாநிலங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிர படுத்தபட்டுள்ளன. பாதுகாப்பை கருதி ஒபாமா பயன்படுத்தி அதிநவீன கார் டெல்லி வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் பலசிறப்பு அம்சங்கள் உள்ளன. இந்த கார் எந்த சூழ்நிலையிலும் பஞ்சர் ஆகாது. அப்படியானாலும் தொடர்ந்து கார் ஓடும். இந்த காரில் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. எந்த விதத்திலும் இந்த காரில் தீவிபத்து ஏற்படாது.

காரில் இருந்த படியே உலகின் எந்த பகுதிக்கும் தொடர்பு கொண்டு பேசலாம். சுருக்கமாக சொன்னால் இது ஒரு நடமாடும் அதிபர் மாளிகை என்று அழைக்கப்படுகிறது. அப்படிப்பட்ட சிறப்புடைய இந்த கார் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அதிபர் ஒபாமா இந்தியாவுக்கு கடந்த 2010 ம் ஆண்டு முதல் முறையாக வந்துள்ளார். தற்போது அவர் வருவது 2 வது முறையாகும்.

இதை பெருமையாக கருதுவதாக அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். மேலும் அமெரிக்க அதிபர் வரலாற்றில் ஒரு நாட்டிற்க்கு 2 வது முறையாக செல்லும் ஒரே அதிபர் ஒபாமா என்பது குறிப்பிடதக்கது. அதுவும் இந்தியா என்பது சிறப்பு அம்சமாகும். முன்னதாக தனது பயணத்திற்கு முன் அவர் பாகிஸ்தானிற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். பயங்கரவாதிகளுக்கு புகழிடம் அழிப்பதை ஒருபோதும் ஏற்கமுடியாது என்று எச்சரித்துள்ள அவர் மும்பையில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் தொடர்புடையவர்களை நீதியின் முன் பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்றும் ஒபாமா எச்சரித்துள்ளார்.

இந்திய பயணத்தின் போது ஒபாமாவுக்கும் அவரது மனைவிக்கும் பிரதமர் மோடி பல சிறப்பு பரிசுகளை அளிக்கவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒபாமா வருகையை முன்னிட்டு டெல்லி நகரமே பரபரப்போடு காணப்படுகிறது. வரும் 27-ம் தேதி தனது இந்திய சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு அதிபர் ஒபாமா சவுதி செல்கிறார். அங்கு மறைந்த மன்னரின் உடலுக்கு ஒபாமா அஞ்சலி செலுத்துகிறார். இதன் காரணமாகவே அவர் தனது ஆக்ரா பயணத்தை ரத்து செய்து விட்டதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து