முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலிய ஓபன்: 4– வது சுற்றில் செரீனா, ரட்வன்ஸ்கா

சனிக்கிழமை, 24 ஜனவரி 2015      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன் - கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.உலகின் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையும், ஆஸ்திரேலிய ஓபன்  பட்டத்தை 5 முறை வென்றவருமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 3– வது சுற்றில்  உக்ரைனை சேர்ந்த எலினாவை எதிர் கொண்டார்.

இதில்  செரீனா 4–6, 6–2, 6–0 என்ற செட் கணக்கில் வென்று4– வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த சுற்றில் அவர் 24–ம் நிலை வீராங்கனை கார்பினை (ஸ்பெயி சந்திக்கிறார்.6–ம் நிலை வீராங்கனை  ரட்வன்ஸ்கா (போலந்த 6–0, 7–5 என்ற நேர்செட் கணக்கில் லெப்சென்கோவை (அமெரிக்கா) தோற்கடித்தார். ரட்வன்ஸ்கா 4– வது சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த வீனஸ் வில்லியம்சை  எதிர்கொள்கிறார்.

வீனஸ் 3–வது சுற்றில் இத்தாலி வீராங்கனை கேமிலாவை 4– 6, 7–6 (7–3), 6–1 என்ற  கணக்கில் வென்றார்.11–ம் நிலை வீராங்கனை சிபுல்கோவா (சுல 7–5, 6–2 என்ற கணக்கில் கோர்னெட்டை  பிரான்ஸ்) வீழ்த்தினார். அவர் 4–வது சுற்றில் அசரென்கா (பெலராஸ்) அல்லது ஸ்டைர் கோவாவை  (செக்குடியரசு) சந்திக்கிறார்.8–ம் நிலை வீரர் ரோனிக் (கனடா) 6–4, 6–3, 6–3 என்ற நேர் செட் கணக்கில் ஜெர்மனியை சேர்ந்த பெஞ்சமின் பெக்கரை எளிதில் வீழ்த்தி 4– வது சுற்றுக்கு தகுதி  பெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து