முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.257 கோடி இழப்பீடு தர வெ.இ. வாரியத்துக்கு பி.சி.சி.ஐ. கெடு

சனிக்கிழமை, 24 ஜனவரி 2015      விளையாட்டு
Image Unavailable

மும்பை - வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியா சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஒருநாள் போட்டியை பாதியில் ரத்து செய்ததால் இன்னும் ஒரு வாரத்தில் 257 கோடி இழப்பீடு தர வேண்டும் என்று, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்துக்கு இந்திய வாரியம் நோட்டீஸ்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. சம்பள விவகாரத்தில் மேற்கிந்திய தீவுகள் வாரியத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாக தர்மசாலாவில் நடந்த நான்காவது ஒரு நாள் போட்டிக்கு பின்னர்  டுவெய்ன் பிராவோ மற்றும் மேற்கிந்திய தீவு அணி வீரர்கள் தொடரை பாதியில் கைவிட்டு நாடு  திரும்பினர்.

இதனால்  அதிர்ச்சியடைந்த இந்திய கிரிக்கெட் வாரியம், தொடரை பாதியில் முடித்ததற்காக  வெஸ்ட் இண்டீஸ் வாரியம் ரூ. 257 கோடி (41.97 மில்லியன் டாலர்) இழப்பீடு தர வேண்டும்.  இல்லாவிட்டால் இனி இரு தரப்பு தொடர்களில் வெ.இ. வாரியத்துடன் இந்தியா விளையாடாது  ன கடிதம் அனுப்பியது. இந்த பிரச்னையைத் தீர்க்க 40 நாட்கள் அவகாசம் தருமாறு கோரி வெஸ்ட்  இண்டீஸ் வாரியம் பதில் கடிதம் அனுப்பியது.

இந்த 40 நாட்கள் முடிவடைவதற்கு முதல் நாள் வெ.இ. வாரியம் மேலும் கடிதத்தை இந்தியாவுக்கு  அனுப்பியது. அதில், இந்திய வாரியத்துக்கு இழப்பீடு தர முடியாத நிலையில் உள்ளதாகவும், பிரச்னையைத் தீர்க்க மேலும் கால அவகாசம் அளிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டது. இதன்  பின்னரும் இந்தப் பிரச்னையைத் தீர்க்க வெ.இ. வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியச் செயலாளர் சஞ்சய் படேல், வெ.இ. வாரியத்துக்கு மீண்டும் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.
 
அதில், பிரச்னைக்கு தீர்வு காண வெ.இ. வாரியம் எந்த தீர்வையும் முன் வைக்காதது  ஆச்சரியமளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘’அக்டோபர் 31ம் தேதி அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விஷயங்களை இன்னும் 7 நாட் களுக்குள் நிறைவேற்றாவிட்டால், வெ.இ. கிரிக்கெட் வாரியத்துக்கு எதிராக உரிய நீதிமன்றத்தில் சட்டரீதியிலான நடவடிக்கையை இந்திய  வாரியம் எடுக்கும்,’’ என்று கடிதத்தில் வாரிய செயலாளர் சஞ்சய் படேல் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து