முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திராவில் பன்றி காய்ச்சல் நோய்க்கு 2 பேர் பலி

சனிக்கிழமை, 24 ஜனவரி 2015      இந்தியா
Image Unavailable

நகரி - தெலுங்கானாவை தொடர்ந்து ஆந்திரா பன்றி காய்ச்சல் பரவி வருகிறது. இதில் பாதிக்கப்பட்ட 2 பேர் பலியாகினர். மேலும் 12 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கெனவே பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் ஐதராபாத் மருத்துவமனையில் பலியானார்.இந்த நிலையில் ஓங்கோல், விசாகப்பட்டினத்தில் பன்றி காய்ச்சல் பரவி உள்ளது. விசாகப்பட்டினம் கண்டமாதலூரைச் சேர்ந்த குவாரி ஊழியர் சிவக்குமார் என்பவர் பலியானார்.

இதே போல்  விசாகப்பட்டினம் கிங்ஜார்ஜ் அரசு மருத்துவமனையில் 6 வயது சிறுவன் ஒருவன்  மரணம் அடைந்தான். மேலும் 8 வயது சிறுமி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று  வருகிறார்.மேலும் 12 பேர் பன்றி காய்ச்சல் காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாக  ஆந்திர சுகாதாரதுறை மந்திரி காமினேனி கூறினார். ஆனாலும் 27 பேர் சிகிச்சை பெறுவதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தது.திருப்பதியில் பன்றி காய்ச்சலை பரவாமல் தடுக்க தேவஸ்தானம் உஷார் நடவடிக்கை எடுத்து உள்ளது.

கோவில் ஊழியர்கள் அனைவருக்கும் முககவசம் அளித்து உள்ளது. பக்தர்களுக்கும் இலவச  முககவசம் வழங்க திட்டமிட்டு உள்ளது.இருந்த போதிலும் பக்தர்கள் முன் எச்சரிக்கையாக தாங்களே  முக கவசம் அணிந்து கோவிலுக்கு வந்து இருந்தன உள்ள அஸ்வினி மருத்துவமனையில் பன்றி  காய்ச்சல் நோயாளிகளுக்காக சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும் பன்றி காய்ச்சல்  பாதிக்கப்பட்டவர்கள் கோவிலுக்கு வரவேண்டாம் என தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்து  உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து