முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பட்ஜெட் தாக்கல் செய்ய விட மாட்டோம்: மார்க். கம்யூ.,

சனிக்கிழமை, 24 ஜனவரி 2015      அரசியல்
Image Unavailable

திருவனந்தபுரம் - கேரள மந்திரியை பட்ஜெட் தாக்கல் செய்ய விடமாட்டோம் என்று மார்க் கம்யூனிஸ்டு தீர்மானம் எடுத்துள்ளது.

கேரளாவில் உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசில் கேரள காங்கிரஸ்  கட்சியின் தலைவர் மானி நிதி மந்திரியாக உள்ளார்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதல்– மந்திரி   உம்மன் சாண்டி மாநிலம் முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்தப் போவதாக அறிவித்தார். அதன்  முதல் கட்டமாக 300–க்கும் மேற்பட்ட மதுபான பார்கள் மூடப்பட்டது. அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து மது பார் உரிமையாளர்கள் கோர்ட்டுக்கு சென்றனர்.

இதற்கிடையே மதிறக்க உதவி செய்வதாக கூறி நிதி மந்திரி மானி தங்களிடம் கோடிக்கணக்கில்  பணம் லஞ்சம் கேட்டதாகவும் அதில், முதல் கட்டமாக அவருக்கு ரூ.1 கோடி கொடுத்ததாகவும், மது  பார் உரிமையாளர் சங்க தலைவர் பிஜு ரமேஷ் தெரிவித்தார். அவரது பேட்டி வெளியானதும் மானி  பதவி விலக வேண்டும் எனக்கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. புகார் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டுமெனவும் எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து அரசு இந்த புகார் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்த உத்தரவிட்டது.  அவர்களின் விசாரணை நடந்து வரும் நிலையில் மானி, பதவி விலககோரும் எதிர்க்கட்சியினரின்  போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.பா.ஜனதா கட்சியி வருகிற 27–ந்தேதி மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மானிக்கு எதிராக கண்டன பேரணி நடத்தி வருகிறார்கள்.மார்க்சிஸ் கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் மானி  உடனடியாக பதவி விலக வேண்டும். இல்லையேல், வருகிற பட்ஜெட் கூட்டத்தில் அவர் நிதி நிலை  அறிக்கையினை தாக்கல் செய்ய விட மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து