முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லிக்கு தனி மாநில அந்தஸ்து: காங்., வாக்குறுதி

சனிக்கிழமை, 24 ஜனவரி 2015      அரசியல்
Image Unavailable

புது டெல்லி - டெல்லிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.
டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜ, ஆம் ஆத்மி, காங்கிஸ் கட்சிகளிடையே மும்முனை போட்டி உருவாகி உளஅளது, பாஜ முதல்வர் வேட்பாளராக கிரண்பெடியை அறிவித்துள்ளது. அவர் கிருஷ்ணா நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். ஆம் ஆத்தமி முதல்வர் வேட்பாளராக அரவிந்த் கெஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியில் நிற்கிறார்.

காங்கிரஸ் சார்பில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் முதல்வர் வேட்பாளரையோ, பிரதமர், வேட்பாளரையோ அறிவிக்கும் வழக்கம் கிடையாது. ஆனால் முக்கிய தலைவரை முன் நிறுத்தி தேர்தலை சந்திக்கும். கடந்த தேர்தலில் ஷீலா திட்சித்தை முன் நிறுத்தி காங்கிரஸ் தேர்தலை சந்தித்து படுதோல்வி அடைந்தது. இந்த முறை அவர் தேர்தல் களத்தில் இறுந்து ஒதுங்கிக் கொண்டார்.

அவருக்கு பதில் முன்னால் மத்திய மந்திரி அஜய் மக்கோள் முன் நிறுத்தப்பட்டு உள்ளார். அவர் காங்கிரசின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.அதில் டெல்லிக்கு முழு அளவிலான மாநில அந்தஸ்து வழஹ்கப்படும். மின்சார கட்டணத்தில் சலுகை அளிக்கப்படும் டெல்லியில் மக்களுக்கு சிறப்பான பாதுகாப்பு வழங்கப்படும், ஊசலாட்டம் இல்லாத நிலையான ஆட்சி அமைப்போம் என்பன உள்பட ஏராளமான வாக்குறுதிகல் அளஇக்கப்பட்டு உள்ளன.

இதே வாக்குறுதியைத் தான் பாஜகவும் கடந்த 2013-ம் ஆண்டு வாக்குறுதியாக அளித்தது. தற்போது கிரண் பெடி இதை முன்னிலைப்படுத்தி இதை முன்னிலைப்படுத்தி பிரசாரம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து