முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமிதாப் பச்சனிடம் நிறைய கற்று கொண்டேன்: தனுஷ்

சனிக்கிழமை, 24 ஜனவரி 2015      சினிமா
Image Unavailable

சென்னை - அமிதாப்பிடம் நிறைய கற்றுக்கொண்டேன்  என்று  சென்னையில் நடைபெற்ற  ஷமிதாப்  அறிமுக விழாவில் நடிகர்  - தனுஷ் பேசினார் . தேசியவிருது பெற்ற தனுஷ் தமிழ் மொழி தாண்டி தன் எல்லையை விரிவுபடுத்திவருகிறார். தனுஷ் நடிக்கும் இரண்டாவது இந்திப்படம் 'ஷமிதாப்'..இதில் தனுஷ் அமிதாப் பச்சனுடன் நடிக்கிறார். ஷமிதாப்' படத்தின் அறிமுகவிழா  சத்யபாமா பல்கலைக் கழகத்தில்நடைபெற்றது. விழாவுக்கு வருவதாக இருந்த அமிதாப் பச்சன் தவிர்க்க இயலாத காரணங்களால் வரவில்லை.

இந்த விழாவில் நடிகர் தனுஷ் பேசும் போது.. "இந்தியில் முதல் படம் முடித்த போது அடுத்து என்ன    படம் என்று கேள்வி வந்தது. எதைச் செய்வது என்ற புரியவில்லை. நல்ல கதைக்காக பல மாதங்கள் காத்திருந்தேன்.  அமிதாப் சாருடன் நடிப்பது பெருமைமுதலில் அவர் நல்ல மனிதர். அவருடன்  நடிக்கும் போது கற்றுக்கொள்ள வேண்டும் என்றுதான் நடிக்கவே ஆசைப்பட்டேன்.    கற்றுக் கொண்டேன்.

அவர் ஒரு ஜாம்பவான். ஏற்கெனவே அவரைச் சந்தித்திருக்கிறேன். ஒரு விருதுவிழாவில் மேடையில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது  அவரைச் சந்தித்திருக்கிறேன். இந்தப் படத்தில் என்ன ஹோம் ஒர்க் செய்தீர்கள்,என்ன கஷ்டங்களைச் சந்தித்தீர்கள் என்றெல்லாம் கேட்கிறார்கள். வீட்டில் சிந்தித்து நடிக்கிற அளவுக்கு ஹோம் ஒர்க் செய்கிற அளவுக்கு எனக்கு அறிவு கிடையாது. காலியான மூளையுடன்தான் படப்பிடிப்பு குச் செல்வேன். அதில் வேண்டியதை இயக்குநர் நிரப்புவார். நான் வெளிப்படுத்துவேன். இதுதான் நடந்தது.

இந்தப் படத்தில் நான் நடிக்கும் போது உடன் நடித்த யாரும் என்னை சிரமப்படுத்த வில்லை. ''என்றார். அக்ஷரா பேசும் போது. " படப்பிடிப்பு அனுபவம் முதலில் எனக்குப் பயம் .பதற்றமாக இருந்தது. இவ்வளவு பெரிய யூனிட்..இவ்வளவு பெரிய ப்ராஜக்ட் என்று..கைகால் உதறியது.  இப்படத்தில் நடித்தது மறக்க முடியாது "என்றார். விழாவின் தொடக்கத்தில் படத்தின் ட்ரெய்லர் திரையிடப்பட்டது. இளையராஜாவின் 'ஆசைய காத்துல தூதுவிட்டேன்' 'ஜானி' படத்தின்பாடல் மெட்டில் இப்படத்தில் இந்தியில் பாடல் இடம் பெற்றுள்ளது.

ஷமிதாப்'. படத்தை ஹோப் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. அமிதாப், தனுஷ், பால்கி ஆகியோரின் நிறுவனங்களும் தயாரிப்பில் இணைந்துள்ளன. ஈராஸ் நிறுவனம் படத்தை வெளியிடுகிறது. பிப்ரவரி.6ல்  படம் வெளியாகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து