முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடியரசு தினம்: கவர்னர் இன்று கொடியேற்றுகிறார்

ஞாயிற்றுக்கிழமை, 25 ஜனவரி 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - நாட்டின் 66-ஆவது குடியரசு தினம் நாளை கொண்டாடப் படுவதையொட்டி, சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் இன்று  காந்தி சிலை அருகே  கவர்னர் கே.ரோசய்யா தேசியக் கொடி ஏற்றுகிறார்.
இந்த நிகழச்சியில் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் அரசு துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பிரமுகர்கள் பலர் பங்கேற்கிறார்கள்.

நாடு முழுவதும் குடியரசு தினவிழா  கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.அமெரிக்க அதிபர் ஒபாமா வருகையொட்டி தீவிரவாத அச்சுறுத்தல்கள் இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் அனைவரும் சிறப்பான முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று டி.ஜி.பி. அசோக் குமார் உத்தரவிட்டுள்ளார்.நாடு முழுவதும் 66-ஆவது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதை யொட்டி, தமிழகத்திலும் குடியரசு தின கொண்டாட்டத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இதையடுத்து மெரினா கடற்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

1 கி.மீ. தூரத்துக்குள் இருக்கும் வணிக வளாகங்கள் மற்றும் பொது மக்கள் கூடும் பகுதிகள் அனைத்திலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மெட்டல் டிடெக்டர் கருவியின் உதவியுடன் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. பாதுகாப்பு பணியில் போலீஸ் மோப்ப நாய்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. குடியரசு தினத்தையொட்டி மெரினா பகுதியில் மட்டும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இணை கமிஷனர் ஸ்ரீதர் தெரிவித்தார்.

சென்னை மாநகர் முழுவதும் குடியரசு தின பாதுகாப்புக்காக 18 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களிலும், கோயம்பேடு பஸ் நிலையத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.சந்தேகத்துக்கிடமாக யாராவது நடமாடினால் அவர்களை கண்டுபிடிப்பதற்காக கேமராக்கள் மூலமும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் காவல் துறைத் தலைவர் அலுவலகத்துக்கு எதிரேயுள்ள மகாத்மா காந்தி சிலை அருகில் குடியரசு தின கொண்டாட்டத்துக்கான நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. கவர்னர் கே.ரோசய்யா விழாவில் பங்கேற்று தேசியக் கொடியை இன்று ஏற்றி வைக்கிறார்.முப்படைகளின் பலத்தைப் பறைசாற்றும் வகையில், ராணுவ டாங்குகள், போர் விமானங்கள் ஆகியவற்றை மாதிரியாகக் கொண்ட அலங்கார ஊர்திகள் விழாவின் போது அணிவகுக்கவுள்ளன.

மேலும், தமிழக அரசின் 25-க்கும் மேற்பட்ட அரசுத் துறைகளின் செயல்பாட்டை விளக்கும் வகையிலும்
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறும்.  கவர்னர் ரோசய்யா தேசியக் கொடியை ஏற்றி வைத்த பிறகு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை, காலசார நிகழ்ச்சிகளும், அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும் நடைபெறும்.சிறப்பாக வடிவமைக்கப்பட்ட அலங்கார ஊர்திகளுக்கும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு, கவர்னர் மாளிகையில் காலை 11 மணியளவில் முக்கியப் பிரமுகர்களுக்கான தேநீர் விருந்து நிகழ்ச்சி நடைபெறும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து