முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தி எதிர்ப்பு தியாகிகளுக்கு அமைச்சர்கள் அஞ்சலி

ஞாயிற்றுக்கிழமை, 25 ஜனவரி 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - இந்தி எதிர்ப்பு போரில் உயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வீரவணக்கம் செலுத்தும் பேரணிகள் சென்னையில் நடந்தது. இந்த பேரணியில் பங்கேற்ற அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் இந்தி எதிர்ப்பு போர் தியாகிகளின் உருவப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

அண்ணா திமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா அறிவிப்பிற்கிணங்க மொழிப்போரில் உயிர் நீத்த தியாகிகளுக்கு வீரவணக்க தினம் சென்னையில் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. சென்னை அமைந்தகரையில் அதிமுக மாணவர் அணி சார்பில் வீரவணக்க நாள் ஊர்வலம் புறப்பட்டது. தென்சென்னை மாவட்ட அதிமுக மாணவர் அணி சார்பில் நடந்த இந்த ஊர்வலத்திற்கு  அதன் செயலாளர் செந்தில் வேல் தலைமை தாங்கினார்.

இதில் அதிமுக இலக்கிய அணி செயலாளரும் சமூக நலத்துறை அமைச்சருமான பா.வளர்மதி, அதிமுக அமைப்பு செயலாளரும் கைத்தறித்துறை அமைச்சருமான கோகுல இந்திரா, தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் கலைராஜன், மாணவர் அணி மாநில செயலாளர் எஸ்.ஆர்.விஜயகுமார் எம்.பி., அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், ஆயிரம் விளக்கு பகுதி செயலாளர் நுங்கை மாறன், மாமன்ற உறுப்பினர்கள் சிவராஜ், ஆறுமுகம் என்கிற சின்னையா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த ஊர்வலம், அண்ணாநகர் வளைவு அருகே நிறைவடைந்தது. அங்கு நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பா.வளர்மதி, கோகுல இந்திரா, உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் இந்தி எதிர்ப்பு போரில் உயிர்நீத்த தியாகிகளின் உருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதேபோல் சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரி அருகில் இருந்தும் வீரவணக்க பேரணி புறப்பட்டது. தென்சென்னை தெற்கு மாவட்ட மாணவர் அணி செயலாளர் ராமலிங்கம் தலைமையில் நடந்த இந்த பேரணி வேளச்சேரி விஜயநகரில் நிறைவடைந்தது.

அங்கு நடந்த நிகழ்ச்சியில் இந்தி எதிர்ப்பு போரில் உயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த ஊர்வலத்தில் அமைச்சர்கள் பா.வளர்மதி, கோகுல இந்திரா அமைப்பு செயலாளர் விசாலாட்சி நெடுஞ்செழியன், எம்.கே அசோக் எம்.எல்.ஏ மாவட்ட செயலாளர் விருகை ரவி  உள்ளிட்டவர்களும் ஆயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞரணி மற்றும் பல்வேறு அணியினர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து